தமிழகத்தில் நவரத்தினக்கல் கடத்தும் மாஃபியா கும்பல்: குறிவைக்கும் போலீசார்
நவரத்தினக்கல் கடத்தும் கும்பல்களை மத்திய, மாநில போலீஸ் நிர்வாகங்கள் குறி வைத்து கைது செய்து வருகின்றன.
தமிழகத்தில் மாபியா கும்பல் நவரத்தினக்கல் மற்றும் இயற்கை, செயற்கை கற்களை பட்டை தீட்டி பல கோடி ரூபாய்க்கு விற்பனை செய்து வருகின்றனர். இது பற்றி நமது செய்தி தளத்தில் (இன்ஸ்டாநியூஸ்) விரிவான செய்தி சில நாட்களுக்கு முன்னர் வெளியானது. இந்த கும்பல் ஆண்டுக்கு பல லட்சம் கோடிக்கு பணப்பரிவர்த்தை செய்கிறது. இதன் மூலம் வரும் வருவாயில் பெரும் பகுதி தீவிரவாதிகளுக்கு செல்கிறது எனவும் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து மத்திய, மாநில உளவுத்துறைகளும், பல்வேறு வகையான போலீஸ் பிரிவுகளும் இதில் நேரடி கவனம் செலுத்துகின்றனர். நவனத்தினக்கற்கள் கடத்தல் கும்பல்களை தடுக்க நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மிகப்பெரிய அளவிலான இரண்டு கடத்தல் கும்பல்கள் சிக்கி உள்ளனர். இவர்களிடம் இருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள கற்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த கும்பல்களின் சட்டவிரோத செயல்களை முழுமையாக தடுப்பதோடு, கற்கள் விற்பனையை முறைப்படுத்தி ஒரு ஒழுங்கான வணிக அமைப்பினை நிறுவி, அரசு இதற்கு இதர பொருட்களை போல் வரிவசூல் செய்தால்இந்த வருவாயும் மத்திய, மாநில அரசுகளுக்கு பெரும் அளவில் உதவியாக இருக்கும் என பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.