விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் உலக பெண்கள் தினவிழா

Update: 2022-03-09 07:00 GMT

காரியாபட்டியில் நடைபெற்ர உலக பெண்கள் தின விழிப்புணர்வு பேரணி கருத்தரங்கம்

காரியாபட்டியில் பல்வேறு அமைப்புகள் சார்பில்  உலக பெண்கள் தின விழிப்புணர்வு பேரணி கருத்தரங்கம் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் வருவாய்துறையில் பணியாற்றும் பெண் ஊழியர்கள் சார்பாக சர்வதேச பெண்கள் தினவிழா கொண்டாடப்பட்டது. வட்டாட்சியர் தனக்குமார் தலைமை வகித்தார். தலைமையிடத்து துணை வட்டாட்சியர் முன்னிலை வகித்தார்.

காரியாபட்டி ,சுரபி உண்டு உறைவிடப் பள்ளியில் நடைபெற்ற பெண்கள் தின விழாவுக்கு, சுரபி அறக்கட்டளை தலைவர் விக்டர் தலைமை வகித்து   இலவச கணினி பயிற்சி முடித்த மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார். இதையொட்டி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. 

ஜனசக்தி பவுண்டேசன் சார்பாக பெண்கள் தினவிழா நடைபெற்றது. நிறுவனர் சிவக்குமார் தலைமை வகித்தார். அறங்காவலர் சாவித்திரி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில், பெண்கள் முன்னேற்றத்தில் கல்வி பற்றி இன்பம் பவுண்டேசன் நிர்வாகி விஜயகுமார் பேசினார்.

ஆத்மா திட்ட குழு தலைவர் கந்தசாமி, வழக்கறிஞர் செந்தில்குமார்,  சமூக ஆர்வலர் ஜெயக்குமார், மகளிர் குழு நிர்வாகிகள் சாந்தி பஞ்சவர்ணம் உட்பட பலர் கலந்து கொண்டனர். விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றியம் அ.முக்குளம் கஸ்தூர்பா பாலிகா வித்யாலயா உண்டு உறைவிட பள்ளி யில், உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு, சுரபி அறக்கட்டளை நிறுவனர் விக்டர் தலைமை வகித்தார் ஜான்சன் பால்ராஜ் சப் இன்ஸ்பெக்டர் விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார். பேரணியில், மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி ஊர்வலமாக பங்கேற்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர் .பள்ளித் தலைமை ஆசிரியை மகாதேவி அரசு பள்ளி ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News