மதுரையில் பெண்ணிடம் மோட்டார் சைக்கிளில் வந்து 14 பவுன் நகை பறிப்பு

மதுரையில் பெண்ணிடம் மோட்டார் சைக்கிளில் வந்து 14 பவுன் நகை பறித்து சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2021-12-26 12:38 GMT

மதுரை புதுஜெயில் ரோடு முரட்டன்பத்திரி மெயின் வீதியை சேர்ந்தவர் தீபா (வயது38.) இவர், மதுரைகோட்ஸ் பாலம் தெற்குப் பகுதியில் இரு சக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றார். அப்போது, அவரை பின் தொடர்ந்து வந்த 2 ஆசாமிகள், தீபா அணிந்திருந்த 14 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்று விட்டனர் .

இந்த சம்பவம் குறித்து, அவர் திலகர் திடல் போலீசில் புகார் செய்தார் . போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரிடம் செயின் பறித்த பைக் ஆசாமிகள் இருவரையும் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News