மதுரையில் வாகன திருட்டில் ஈடுபட்டோர் கைது
போலீசார் ராஜாவிக்னேஷ் என்பவரிமிருந்த 9 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்;
மதுரையில் பல்வேறு இடங்களில் வாகன திருட்டில் ஈடுபட்ட சிறார் உட்பட 6 பேரை அவனியாபுரம் போலீசார் கைது: செய்தனர்.
மதுரை, அவனியாபுரம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட வில்லாபுரம் ஹவுசிங் போர்டு பகுதியில் உள்ள இக்பால் மகன் முஸ்தபா ராசிக் என்பவர் தனது இருசக்கர வாகனம் காணவில்லை என கடந்த சில நாட்களுக்கு முன்பு அவனியாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதனடிப்படையில், அவனியாபுரம் போலீசார் திருப்பரங்குன்றம் - வெள்ளக்கல் சந்திப்பில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ் வழியாக வந்த 6 பேர் போலீசாரை கண்டவுடன் வாகனத்தை திருப்பி ஓட முயற்சிக்கும்போது, அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியபோது, அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் சந்தேகமடைந்த போலீசார் தீவிர விசாரணை செய்தபோது பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்களை திருடியது தெரிய வந்தது.
பல்வேறு திருட்டு சம்பவங்களில் தொடர்புடைய எஸ்.எஸ்.காலனி பகுதியை சேர்ந்த ராஜா மகன் சூர்யா (19) அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் மகன் சஞ்சீவ் காந்தி (19), மதுரை சோலை அழகுபுரம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் மகன் ஹரி முத்துக்குமார் (18)திருநகர் சீனிவாசா காலனி பகுதியை சேர்ந்த ஜெயகோபால் மகன் சுபாஷ் (18) மற்றும் மலைச்சாமி, திருச்சியை சேர்ந்த தெட்சணாமூர்த்தி என்பது விசாரணையில் தெரியவந்தது.
இவர்கள் கொடுத்த தகவலின்படி, மதுரையில் பல்வேறு இடங்களில் திருடிய வாகனங்களை திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் செம்பட்டியில் உள்ள ராஜேந்திரன் மகன் ராஜா விக்னேஷ் (28) என்பவரிடம் இந்த திருட்டு வாகனங்களை விற்றது தெரியவந்தது. பின்னர் ,அதன் அடிப்படையில் போலீசார் ,ராஜா விக்னேஷ் என்பவரிடம் இருந்த 9 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து குற்றவாளிகளை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.