மதுரை மண்டலம் 1-ல் டிச.7-ல் மக்கள் குறைதீர் முகாம் : ஆணையர் தகவல்
பொதுமக்கள் அரசின் வழிகாட்டுதலின்படி முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியினை பின்பற்றியும் முகாம்களில் கலந்து கொள்ளலாம்;
மதுரை மாநகராட்சி மண்டலம் 1-ல் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெறவுள்ளதாக ஆணையர் கா.ப.கார்த்திகேயன் தகவல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட தகலவ்:மதுரை மாநகராட்சி மண்டலம் 1 அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்வரும் 07.12.2021 (செவ்வாய்க்கிழமை) அன்று நடைபெற உள்ளது. அதன்படி செவ்வாய்க்கிழமை) அன்று காலை 10.00 மணி முதல் 12.30 மணி வரை மாநகராட்சி மண்டலம்- 1 அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும்; முகாம் நடைபெறுகிறது. இந்த குறைதீர்க்கும் முகாமில், பொதுமக்கள் குடிநீர், புதை சாக்கடை இணைப்பு, வீட்டு வரி பெயர் மாற்றம், புதிய சொத்து வரி விதிப்பு, கட்டிட வரைபட அனுமதி, தெருவிளக்கு, தொழில்வரி உள்ளிட்ட குறைகளை கோரிக்கை மனுவாகக் கொடுத்து பயன் பெறலாம்.
எனவே, பொதுமக்கள் தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியினை பின்பற்றியும் அந்தந்த மண்டலங்களில் நடைபெறும் குறைதீர்க்கும் முகாமில் அந்தந்த மண்டலத்திற்கு உட்பட்ட பொதுமக்கள் மட்டும் தங்கள் கோரிக்கை மனுக்களை கொடுத்து பயன்பெறலாம் என்று ஆணையாளர் ப.கார்த்திகேயன் தகவல் தெரிவித்துள்ளார்.