இரும்பாடி பாலமுருகன் ஆலய பங்குனி திருவிழா: பக்தர்கள் தரிசனம்
சோழவந்தான் அருகே, இரும்பாடி ஸ்ரீ பாலமுருகன் ஆலய பங்குனி திருவிழாவில் பக்தர்கள் திரளாக பங்கேற்று தரிசனம் செய்தனர்.;
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே இரும்பாடி அருள்மிகு ஸ்ரீ பாலமுருகன் திருக்கோவில் பங்குனி உத்திர உற்சவ விழா 51வது ஆண்டு விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு வைகை ஆற்றில் இருந்து காவடி எடுத்தல் பால்குடம் எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து பாலமுருகன் மின்னொளி அலங்காரம் உள்ள வாகனத்தில், ஒயிலாட்ட குழுவினரின் கலை நிகழ்ச்சிகளோடு, பவனி வர, பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. இதில் வெள்ளாளர் முன்னேற்ற கழக நிர்வாகி அன்னலட்சுமி ஷகிலா கணேசன் சோழவந்தான் பேரூராட்சி சேர்மன் ஜெயராமன், இரும்பாடி ஊராட்சி மன்ற தலைவர் ஈஸ்வரி பண்ணைரசெல்வம், துணை தலைவர் கண்ணண், சோழவந்தான் பேரூராட்சி கவுன்சிலர் வழக்கறிஞர் சத்யபிரகாஷ், ஜவுளிக்கடை பி. எஸ் மணி மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இரும்பாடி வெள்ளாளர் உறவின் முறை நலச்சங்கம் வ. உ. சி .கிராம நல சங்கம் ஏற்பாடு செய்து இருந்தனர்.