பிரதமர் மோடிக்கு எதிராக உசிலம்பட்டி அருகே விவசாயிகள் போராட்டம்

மதுரை வந்த பிரதமர் மோடிக்கு அனைத்து விவசாய சங்கங்கத்தினர் செல்லம்பட்டியில் விவசாயிகள் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினர்

Update: 2024-02-27 13:38 GMT

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் 

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு மற்றும் எஸ்.கே.எம். (என்.பி.) அமைப்பின் சார்பில் டெல்லியில் போராடும் விவசாயிகளை துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்வதை கண்டித்தும், குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய நிரந்தர சட்டம் கொண்டு வரவும்.எம். எஸ். சாமிநாதன் குழு பரிந்துரையை நிறைவேற்றிடவும், கடன் முழுவதையும் தள்ளுபடி செய்திடவும், விவசாயிகள் போராட்டத்தில் பிரதமர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவும் வலியுறுத்தி மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஒன்றிய அலுவலகத்தின் முன்பு பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, மாநில கௌரவ தலைவர் எம் பி .ராமன் , தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் ஆதிமூலம் உள்ளிட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.

இது குறித்து தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் மாநில கவுரவத் தலைவர் எம். பி. ராமன் கூறியதாவது: மத்திய மோடி அரசுகடந்த 10 ஆண்டுகளாக பொறுப்பில் இருந்து வருகிறது. இந்த நிலையில், இந்திய விவசாயிகளுக்கு தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்ட விவசாயிகளின் கோரிக்கைகளை தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற பட்ஜெட்டில் கடந்த ஒன்றறை ஆண்டு காலம் இந்திய அளவில் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு பாரத பிரதமர் மோடி, போராட்டத்தை வாபஸ் வாங்குங்கள் உங்கள் கோரிக்கையை நிறைவேற்றி தருகிறோம் என்று உத்தரவாதம் அளித்து இருந்தார்.

ஆனால், போராட்டத்தை கைவிட்ட பின்பும் பிரதமர் மோடி கொடுத்த உத்தரவாதத்தை நிறைவேற்றவில்லை. விவசாயிகள் உள்ளடக்கிய அனைத்து பொருள்களுக்கும் அதாவது கரும்பு நெல் மஞ்சள் தென்னை போன்ற விவசாய பொருள்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நிறைவேற்ற வில்லை. அதேபோல், ஏழு பேர் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர் .

சுமார் 300-க்கும் மேற்பட்டோர் காயம் பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 800-க்கும் மேற்பட்ட விவசாயிகள் அடித்து துன்புறுத்தப்பட்டுள்ளனர்.

இது சம்பந்தமாகவும் அவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்திருந்தோம். அதையும் நிறைவேற்ற வில்லை. மேலும், விவசாயிகளுக்கு கொடுத்த எந்த ஒரு வாக்குறுதியும் நிறைவேற்றாத தொடர்ந்து விவசாயிகளை வஞ்சித்து வரும் மத்திய மோடி அரசை நிராகரிக்கும் விதமாக தமிழகம் வரும் மோடிக்கு கருப்பு கொடி காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இனிவரும் காலங்களிலாவது விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றி தர வேண்டும். டெல்லியில் போராடும் விவசாயிகளின் கோரிக்கைகள் அனைத்தையும் உடனடியாக நிறைவேற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

தொடர்ந்து, ராமன் உள்ளிட்ட விவசாயிகளை காவல்துறை கைது செய்தது.

Tags:    

Similar News