உசிலம்பட்டி அருகே பலத்த மழையால் பயிர்கள் சேதம்: விவசாயிகள் கவலை

உசிலம்பட்டி அருகே, அறுவடைக்கு தயாராக இருந்த கம்பு பயிர்கள் கனமழை மற்றும் காட்டுப் பன்றியால், சேதமடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை

Update: 2024-05-26 05:43 GMT

கனமழை காரணமாக  கம்பு பயிர்கள் அனைத்தும் மீண்டும் முளைப்பு தன்மை ஏற்பட்டு முளைக்க தொடங்கியது 

உசிலம்பட்டி அருகே, அறுவடைக்கு தயாராக இருந்த கம்பு பயிர்கள் கனமழை மற்றும் காட்டுப் பன்றியால், சேதமடைந்துள்ளது . சாய்ந்து கிடக்கும் கம்பு பயிர்கள் விளைநிலத்திலேயே மீண்டும் முளைத்ததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே ,பெருங்காமநல்லூர் கிராமத்தில், 15க்கும் மேற்பட்ட விவசாயிகள் 3 ஏக்கர் முதல் 5 ஏக்கர் வரை என மாசி பட்டத்தின் விவசாயமாக சுமார் 60 ஏக்கர் கம்பு சாகுபடி செய்துள்ளனர்.

தற்போது, நன்கு விளைந்து அறுவடைக்கு தயாராக இருந்த இந்த கம்பு பயிர்கள், கடந்த வாரம் பெய்த கனமழையால் விளைநிலத்திலேயே சாய்ந்து சேதமடைந்தது, இதனிடையே, காட்டுப் பன்றிகளும், கம்பு பயிர் காட்டுக்குள் புகுந்து சாய்ந்து கிடக்கும் கம்பு பயிர்களை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதனால், மண்ணோடு மண்ணாக சாய்ந்து கிடக்கும் கம்பு பயிர்கள் அனைத்தும் மீண்டும் முளைப்பு தன்மை ஏற்பட்டு முளைக்க துவங்கியதால், விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

ஒரு ஏக்கருக்கு 40 ஆயிரம் வரை செலவு செய்து சாகுபடி செய்துள்ள சூழலில், தற்போது, அறுவடை செய்யும் நேரத்தில் கனமழையாலும், காட்டுப்பன்றிகளாலும் ஏக்கர் கணக்கில் சேதத்தை சந்துத்துள்ள விவசாயிகள் செய்வதறியாது திகைத்து வருவதாக கூறுகின்றனர்.

மேலும், மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அரசும் நேரில் ஆய்வு செய்து, உரிய இழப்பீடு வழங்க கோரி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Tags:    

Similar News