மல்லாங்கிணற்றில் நகர்புற வேலைவாய்ப்பு திட்டம்: அமைச்சர் தொடக்கம்

நகரங்களில் வசிக்கும் மக்களில் ஏழைகளாக உள்ள 38 % பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது

Update: 2022-03-18 09:15 GMT

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே மல்லாங்கிணறு பகுதியில் நகர்ப்புற வேலைவாய்ப்புத்திட்டத்தை தொடக்கி வைத்த அமைச்சர் தங்கம்தென்னரசு

விருதுநகர் மாவட்டம்,  மல்லாங்கிணறில் மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நகர்புற வேலைவாய்ப்பு திட்டத்தை தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கிவைத்தார்.

பின்னர்  அமைச்சர் கூறியதாவது: நகர்ப்புற ஏழைகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் நகர்புற வேலை வாய்ப்பு திட்டம் செயல்படுத்தப்படும்  என தமிழக முதல்வர்  அறிவித்துள்ளார். அதன்படி, 2015-ம் ஆண்டு நிலவரப்படி தமிழ்நாட்டில் நகரங்களில் வசிக்கும் மக்களில் 38 சதவீத நபர்கள் ஏழைகளாக உள்ளதால், வேலைவாய்ப்பை வழங்கும் வகையில் புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

திறனற்றவர்கள், பாதி திறன் உடையவர்கள், முழு திறன் உடையவர்கள் என்று நகர ஏழைகளை 3 ஆக பிரித்து பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.மேலும், நகரங்களில் உள் கட்டமைப்பை மேம்படுத்துதல், இயற்கை வளங்களை பாதுகாத்தல், வெள்ளகால மீட்பு பணி, பசுமையாக்கல், பாலின சமத்துவத்தை ஊக்குவித்தல் உள்ளிட்ட பணிகளை தினக்கூலி அடிப்படையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்

Tags:    

Similar News