மதுரை நகரில் நடந்த பல்வேறு குற்றச்சம்பவங்கள்: போலீஸார் வழக்குப்பதிவு

மதுரையில் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 3 பேரை போலீஸார் கைது செய்தனர்;

Update: 2022-01-26 08:45 GMT

திருப்பரங்குன்றத்தில் குடிபோதையில் தந்தைக்கு மிரட்டல் மகன் கைது:

 திருப்பரங்குன்றந் கருவாட்டுப்பாறையை சேர்ந்தவர் பாண்டி( 52.) இவரது மகன் பாலமுருகன்( 21.) பாலமுருகனுக்கு குடிப்பழக்கம் இருந்தது. குடித்துவிட்டு அடிக்கடி வந்து தகராறு செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார். இந்நிலையில், சம்பவத்தன்று குடிபோதையில் வந்து தந்தை பாண்டியை அவதூறாகப் பேசி மிரட்டியுள்ளார். இந்த சம்பவம் குறித்து பாண்டி கொடுத்த புகாரில், திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப் பதிவு செய்து மகன் பாலமுருகனை கைது செய்தனர்.

விளக்குத்தூண் பகுதியில் 6 வயது சிறுமி காய்ச்சலுக்கு பலி:

மதுரை விளக்குத்தூண் பகுதியில் 6 வயது சிறுமி திடீர் காய்ச்சலுக்கு பலியானது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் . மதுரை கீழமாசி வீதியை சேர்ந்தவர் மணிவாசகம் மகள் திவ்யதர்ஷினி 6. இவர் மன நோயால் பாதிக்கப்பட்டிருந்தார் .வலிப்பு நோயும் அடிக்கடி வருவதுண்டு. இந்நிலையில், அவருக்கு திடீர் காய்ச்சல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தந்தை மணிவாசகம் கொடுத்த புகாரில், விளக்குத்தூண் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கே புதூரில் வீடு புகுந்து பெண் மீது தாக்குதல் வாலிபர் கைது:

மதுரை, புதூர், முத்துராமலிங்க புரத்தை சேர்ந்தவர் சௌந்தர்யா( 22.) அதே பகுதியை சேர்ந்தவர் பாண்டியன் மகன் சரவணன்( 19.) இவர் சௌந்தர்யாவின் வீடு புகுந்து அவரை ஆபாசமாக பேசி கல்லால் தாக்கினாராம். இந்த சம்பவம் குறித்து ,சௌந்தர்யா புகாரின் பேரில் புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தாக்கிய வாலிபர் சரவணனை கைது செய்தனர்.

மேலமாசி வீதியில் முன்விரோதத்தில் வீடு புகுந்து முதியவர் மீது தாக்குதல்: வாலிபர் கைது:

மதுரை, மேலமாசி வீதியை சேர்ந்தவர் சோமசுந்தரம்( 65.) அதே பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் கார்த்திக் என்ற ஊத்த கார்த்திக்( 25.) இவர்களுக்குள் முன் விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில், சோமசுந்தரம் வீட்டுக்குள் புகுந்த கார்த்திக் அவரை ஆபாசமாக பேசி கத்தியால் தாக்கியுள்ளார். இந்த சம்பவம் குறித்து சோமசுந்தரம் கொடுத்த புகாரின்பேரில், திடீர்நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரை தாக்கிய வாலிபர் கார்த்திக் என்ற ஊத்த கார்த்திகை கைது செய்தனர்.

Tags:    

Similar News