மதுரை அருகே வீடு புகுந்து நகை திருட்டு: போலீசார் விசாரணை
மதுரை அருகே கோச்சடையில் வீடு புகுந்து நகை திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை , கோச்சடை ஆனந்தம்மாள் தெருவைச் சேர்ந்தவர், கோட்டை அம்மாள் 60. சம்பவத்தன்று அதிகாலை, அவரது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள், பீரோவில் வைத்திருந்த மூன்றரை பவுன் தங்கச்செயின், மோதிரத்தை திருடிச் சென்று விட்டனர். அதிகாலை நேரத்தில் நடந்த இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த திருட்டு சம்பவம் குறித்து, கோட்டையம்மாள் எஸ். எஸ். காலனி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து வீடு புகுந்து நகை திருடிய ஆசாமிகளை தேடி வருகின்றனர்.