திருமங்கலத்தில், விவசாய கூட்டுறவு சங்கத்தில் மோசடி செய்த மருந்தாளுநர் கைது
இவர் 2019 பிப்ரவரி மாதத்திலிருந்து 2019 டிசம்பர் வரையில் போலியான ஆவணங்களை தயாரித்து தரக்குறைவான மருந்துகளை வாங்கினார்;
மதுரை அருகே திருமங்கலம் விவசாய கூட்டுறவு சங்கத்தில் ரூ 5 லட்சம் மோசடி செய்த மருந்தாளுநரை போலீசார் கைது செய்தனர் .
திருமங்கலம் விடத்தகுலம் ரோடு , கற்பகம் நகரில் அக்ரிகல்ச்சர் புரட்யூஸ்அன்ட புரொடியூசர் கோவாப்பரேடிவ் அசோசியேஷன் பொதுமேலாளர் பன்னீர்செல்வம். இவர், மத்திய குற்றப்பிரிவு போலீசில் அளித்த புகாரில், இந்த கூட்டுறவு சங்கத்தின் கோவாபரேடிவ் மெடிக்கல் ஷாப் திருமங்கலம் கிளையில் திருமங்கலத்தைச் சேர்ந்த வசந்தகுமார்(40) என்பவர் பார்மசிஸ்டாக வேலை பார்த்து வந்தார்.
இவர் 2019 பிப்ரவரி மாதத்திலிருந்து 2019 டிசம்பர் வரையில் போலியான ஆவணங்களை தயாரித்து தரக்குறைவான மருந்துகளை வாங்கி விற்பனை செய்து அரசாங்கத்திற்கு ரூபாய் 4 லட்சத்து 70 ஆயிரத்து 745 மற்றும் பதினோரு பைசா மோசடி செய்துள்ளதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த புகாரை தொடர்ந்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த விவசாய கூட்டுறவு சங்கத்தின் மருந்தாளுநர் வசந்தகுமாரை கைது செய்தனர்.