திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பெற்றோர் சந்திப்பு கூட்டம்..!
திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில், பெற்றோர் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது.
திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் பெற்றோர் கூட்டம் நடந்தது.
மதுரை:
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே,திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில், பெற்றோர் கூட்டம் முறையே, இளநிலை முதலாம் ஆண்டு, இளநிலை இரண்டாம் ஆண்டு மற்றும் இளநிலை இறுதி ஆண்டு & முதுநிலை படிக்கும் மாணவர்களுக்கு நடைபெற்றது.
இந்தக்கூட்டம் தமிழ் தாய் வாழ்த்து மற்றும் கல்லூரி இறை வணக்கத்துடன் தொடங்கப்பட்டது. முதலாம் ஆண்டு மாணவன் விஷ்ணுபாலாஜி, இரண்டாம் ஆண்டு மாணவன் செல்வஸ்வரன், இறுதி ஆண்டு மாணவன் ராஜா பெற்றோர் கூட்டத்தில் வரவேற்புரை ஆற்றினார்கள்.
கல்லூரி முதல்வர் முனைவர் வெங்கடேசன் தலைமை உரையாற்றினார். கல்லூரியின் செயலர் சுவாமி வேதானந்த, குலபதி சுவாமி அத்யாத்மனந்த ஆசியுரை வழங்கினர். துணை முதல்வர் முனைவர் கார்த்திகேயன், தேர்வுக் கட்டுப்பாட்டாளர் முனைவர் ஜெயசங்கர் மற்றும் அகத்தர உறுதி மைய ஒருங்கிணைப்பாளர் முனைவர் சதீஷ்பாபு சிறப்புரையாற்றினர்கள்.
மாணவர்களின் படிப்பு, விளையாட்டு, வேலைவாய்ப்பு, தகுதி மேம்பாட்டு பயிற்சி தேவை பற்றி பெற்றோர்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. மேலும், பெற்றோர்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர். கல்லூரி முதல்வர் வெங்கடேசன் பெற்றோர்களின் கருத்துக்களுக்கு விளக்கமும் வழங்கினார்.
குருகுல ஒருங்கிணைப்பாளர் முனைவர் சந்திரசேகரன், மாணவர் ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர் பிரேமானந்தம், முனைவர் காமாட்சி, இரகு ஆகியோர் பெற்றோர் கூட்டத்தின் அனைத்து ஏற்பாடுகளையும் முன்னின்று கவனித்துக்கொண்டார்கள். முதலாம் ஆண்டு மாணவன் ஜனநாதன், இரண்டாம் ஆண்டு மாணவன் தமிழ்செல்வன், நவீன்குமார் நன்றி உரை ஆற்றினர்.
பெற்றோர் கூட்டத்தை முறையே முதலாம் ஆண்டு மாணவன் ஜெகநாதன், இரண்டாம் ஆண்டு மாணவன் அபினேஷ், இறுதி ஆண்டு மாணவன் மாணிக்கவாசக யுதிஸ்திரன் ஆகியோர் தொகுத்து வழங்கினார்கள்.
இந்த பெற்றோர் சந்திப்புக்கூட்டத்தால் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரிடையே ஒரு நெருக்கமான தொடர்பு இருக்கும். இதன்மூலமாக மாணவர்கள் படிப்பு, அவர்களின் பண்பு, கல்லூரிக்கு வருகை போன்றவைகளை பெற்றோருக்கு தெரிவிக்க இந்த சந்திப்பு ஒரு பாலமாக இருக்கும். இதனால் மாணவர்களும் கல்வி கற்பதில் கவனம் செலுத்துவார்கள் என்று கல்லூரி தரப்பில் கூறப்பட்டது.