மதுரை நகரில் நடந்த குற்றச் சம்பவங்கள்: காவல்துறை விசாரணை..!

மதுரை மாநகரம் மற்றும் அதனைச் சுற்றி நடந்த குற்றச் செய்திகளை இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.

Update: 2023-09-06 08:30 GMT

குமாரபாளையம்    க்ரைம் செய்திகள்  (பைல் படம்).

மதுரை:

கூடல் புதூரில் வீட்டில் பீரோ லாக்கரில் வைத்திருந்த 8 பவுன் தங்க நகை ரூ 4ஆயிரம் மாயம் : காவல்துறை  விசாரணை.

கூடல் புதூரில் ,வீட்டில் பீரோ லாக்கரில் வைத்திருந்த 8 பவுன் தங்க நகை ரூ 4 ஆயிரம் மாயமானது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கூடல்புதூர் வைகை இரண்டாவது தெருவை சேர்ந்தவர் தமிழ் இனியன். அவரது  மனைவி சாராசரோசினி. தமிழ் இனியன் தொழிலதிபர் ஆவார். ஸ்டீல் வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மனைவி சாராசரோசினி, குழந்தைகளுக்கு பள்ளியில் பணம் கட்டுவதற்காக பள்ளிக்குச் செல்வதற்கு தயார் ஆனார்.

பள்ளிக்கு செல்வதற்காக அவர் அதற்காக பீரோவில் வைத்திருந்த 8 பவுன் நகை, பணம் ரூ 4ஆயிரத்தையும் எடுக்கச்சென்றார். ஆனால், அவை பீரோவில் இருந்து காணாமல் போயிருந்தது. வீட்டில் பல இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை .

பணம் மாயமானது எப்படி என்று தெரியவில்லை. இது குறித்து சாராசரோசினி கூடல் புதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு அவரது நகை, பணம் மாயமானது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

............................................................

தத்தனேரி  கத்தியுடன் வீடு புகுந்து பெண்ணுக்கு மிரட்டல் :2 வாலிபர்கள் கைது.

மதுரை தத்தனேரி பாக்கியநாதபுரம் முத்துமாரியம்மன் கோவில் தெருவைச்  சேர்ந்தவர் குருசாமி மனைவி மாரியம்மாள் 45. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் 45 என்பவருக்கும் இடையே வீட்டு பிரச்னை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில் , செல்வராஜும், தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தாலுகா பிக்கம்பட்டியைச் சேர்ந்த முருகன் மகன் சந்திரன் 24 என்ற இருவரும் கத்தியுடன் மாரியம்மாள் வீட்டுக்குள் புகுந்தனர். அவர்கள் அவரை ஆபாசமாக பேசி மிரட்டல் விடுத்துச் சென்றனர். இந்த சம்பவம் குறித்து, மாரியம்மாள் செல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து, அவருக்கு மிரட்டல் விடுத்த செல்வராஜ் 45 ,சந்துரு 24 ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

...........................................................

புதூரில் தந்தை,  மகனை வீட்டுக்குள் பூட்டி வைத்து மிரட்டல் : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி, மகன், மகள் கைது

புதூரில், தந்தையையும் மகனையும்   வீட்டுக்குள் வைத்து பூட்டி மிரட்டல் விடுத்த நிலையில், அவசர போலீஸ் விரைந்து சென்று அவர்களை மீட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக கணவன்,மனைவி, மகன், மகள் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

புதூர் மகாலட்சுமி நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் 65.இவர் அதே பகுதியைச்சேர்ந்த முனீஸ்வரன் என்பவரின் வீட்டருகே வீடு ஒன்றை விலைக்கு வாங்கி உள்ளார். இதில், அவர்களுக்குள் முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் வீட்டை சுத்தம் செய்ய தந்தையும் மகனும் சென்று உள்ளனர். அப்போது அவர்களை வீட்டுக்குள் வைத்து முனீஸ்வரன் குடும்பத்தினர்  பூட்டியுள்ளனர். அவர்களை வெளியே வரவிடாமல் ஆபாசமாக பேசி மிரட்டியுள்ளனர்.

இதனால், வீட்டிற்குள் இருந்து வெளியே அவர்களால் வரமுடியவில்லை.  அவர்கள் அவசர போலீஸ் உதவிக்கு 100க்கு போன் செய்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தந்தை மகனை மீட்டனர்.  இந்த சம்பவம் குறித்து, ராஜேந்திரன் தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார்.

மேலும் முனீஸ்வரன் குடும்பத்துடன் சென்று ராஜேந்திரன் வீட்டினுள் இருந்த பொருட்களை அடித்து சேதப்படுத்தியுள்ளார்.  இதைத் தொடர்ந்து போலீசார் ,ஒரே குடும்பத்தைச்சேர்ந்த முனீஸ்வரன் 54, அவரது மனைவி தாயம்மாள்45, மகன் செல்வராஜ் 21,மகள் லெட்சுமிபிரியா19 ஆகிய நான்கு பேரையும் குடும்பத்தோடு கைது செய்தனர்.

.....................................................

ஆரப்பாளையத்தில் ஜூஸ் கடைக்காரர் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி பணம் பறிப்பு : நான்கு பேர் கைது

மதுரை ஆரப்பாளையத்தில் ஜூஸ் கடைக்காரரின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி பணம் பறித்த நான்கு பேரை போலீசார் கைது செய்தனர் .

கீழ அண்ணா தோப்பு அண்ணாரே கிருஷ்ணன் தெருவைச்  சேர்ந்தவர் மகேஸ்வரன் மகன் மாரிமுத்து30. இவர் ஆரப்பாளையம் டி.டி. ரோட்டில் ஜூஸ் கடையும் பெட்டிக் கடையும் நடத்தி வருகிறார். பெட்டிக்கடையில் டிராவல்சும் நடத்தி வருகிறார். இந்த நிலையில் , இரவு நேரத்தில் இவர் கடையில் இருந்தபோது நான்கு பேர் அங்கு சென்றனர். அவர்கள் அவரை மிரட்டி தாங்கள் ரவுடி என்று சொல்லி மிரட்டி அவரிடம் பணம் கேட்டுள்ளனர். இதற்கு அவர் மறுத்துவிட்டார்.

ஆதனால், அவர்கள்  மறைத்து வைத்திருந்த கத்தியையும் அறிவாளையும் அவர்கழுத்தில் வைத்து  கழுத்தை அறுத்து விடுவதாக மிரட்டியுள்ளனர். பினனர் அவர் வைத்திருந்த பணம் ரூபாய் 3600 ஐ அவர் பையிலிருந்து பறித்துச் சென்று விட்டனர். இவர்கள் செய்வதை பார்த்த பொதுமக்கள் அங்கு கூடினர்.

அவர்களை மிரட்டும் விதமாக வெட்டி விடுவேன் என்று கூச்சலிட்டபடி, அரிவாள் மற்றும்  கத்தியால்  சாலையின் தடுப்புச் சுவரில் தீப்பறக்க தேய்த்து விட்டு, அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இந்த சம்பவம் குறித்து, மாரிமுத்து கரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணைக்கு பின் ஆரப்பாளையம் சகா சகாய மாதா தெரு சண்முகம் மகன் அஜய் பிரசன்ன குமார் என்ற குட்டிசாக்கு 20, திருப்பரங்குன்றம் மேலத்தெரு ஆண்டாள்புரம் நாச்சியப்பன் மகன் கணேசன் என்ற ராக்கெட் கணேசன் 23 ,கீரைத்  துறை வேத பிள்ளை தெரு நாகராஜ் மகன் சரவணபாண்டி என்ற சரண் 30, திருநகர் பாலசுப்பிரமணியன் தெரு ஜிலானி மகன் சையது இஸ்மாயில் என்ற ஓட்டை 23 ஆகிய நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர்.

......................................................

வைகை தென்கரையில் ஆயுதங்களுடன் இரண்டு வாலிபர்கள் கைது

மதுரை , திலகர்திடல் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் வைகை தென்கரை பேச்சி அம்மன் படித்துறை சந்திப்பருகே சென்றபோது போலீசை கண்டதும் இரண்டு வாலிபர்கள் தப்பி ஓடினர். அவர்களை போலீசார் விரட்டி பிடித்தனர்.

பிடிபட்ட நபர்களிடம் சோதனை செய்தபோது அவர்களிடம் அரிவாள் போன்ற ஆயுதங்கள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் பிடிபட்ட வாலிபர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் செல்லூர் சுயராஜபுரம் முதல் தெரு ராஜசேகரபாண்டியன் மகன் விஜய் சுதர்சன் என்ற கூமுட்டி விஜய் 27, சிம்மக்கல் பேச்சியம்மன் படித்துரை செந்தில்குமார் மகன் சந்தோஷ் என்ற எஸ். ஆர். 20 என்று தெரிய வந்தது.

அவர்கள் இரண்டு பேரையும் கைது செய்தனர் .அவர்கள் எதற்காக? எந்த திட்டத்தில் அந்த பகுதியில் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்தனர் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

...............................................................

குடும்ப பிரச்சனையில் தந்தையை தாக்கிய மகன் கைது: போலீஸ் விசாரணை

மதுரை அண்ணாநகர் முந்திரி தோப்பு சமயபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து 42. அவரது மனைவி செல்விஇவர்களுக்கு ,நான்கு பிள்ளைகள் உள்ளனர். இவர்களுக்குள் குடும்ப பிரச்சனை காரணமாக மன வருத்தம் இருந்து வந்தது.

இந்த நிலையில், சம்பவத்தன்றும் பிரச்சனை ஏற்பட்டது. இதில் , ஆத்திரமடைந்த மனைவி செல்வியும் இரண்டாவது மகன் சந்தான பாண்டியும் விறகு கட்டையால் மாரிமுத்துவை சரமாரியாக தாக்கினர். இந்த சம்பவம் குறித்து மாரிமுத்து அண்ணா நகர் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை தாக்கிய மகன் சந்தான பாண்டியை கைது செய்தனர்.

Tags:    

Similar News