மதுபானக் கூடமாக மாறிய பேருந்து நிழற்குடை: போலீசார் கண்டு கொள்வார்களா..?
திருமங்கலம் அடுத்த புளியம்பட்டி கிராமத்தில் பயணியர் நிழற்குடை மது குடிக்கும் கூடமாக மாறிப்போய்விட்டது.;
மதுரை :
மக்கள் பேருந்து பயணம் மேற்கொள்வதற்கு வரும் நேரங்களில் அவர்கள் நிழலில் நிற்பதற்காக பேருந்து நிழற்கூடங்கள் அமைக்கப்படுகிறது. ஆனால் இவ்வாறு கட்டப்பட்டுள்ள பயணியர் நிழற்குடை மதுபானம் குடிக்கும் இடமாக மாறி வருகிறது. பயனற்ற இடத்தில் கட்டப்பட்டுள்ள இந்த நிழற்கூடம் காட்டியதில் மக்கள் வரிப்பணம் ரூபாய் 5 லட்சம் வீண். அங்கன்வாடி மைய கட்டிடத்திற்கு அருகில் மதுபானமாக மாறிய நிழற்குடையால் பெரும் அவலம் ஏற்பட்டுள்ளது.
:மதுரை மாவட்டம், திருமங்கலத்தை அடுத்த புளியம்பட்டி கிராமத்தில், இந்த தொகுதியின் எம்.எல்.ஏ.வும், முன்னாள் அதிமுக அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார் - ன் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ்ரூபாய் 5 லட்சம் செலவில், பயனற்ற இடத்தில் கட்டப்பட்டுள்ள பயணியர் நிழற்குடை மதுபான கூடமாக மாறியுள்ளதாம்.
நிழற்குடை உட்புறம் முழுவதும் மதுபான பாட்டில்களும், பிளாஸ்டிக் டம்ளர் மற்றும் குப்பை கூளங்களாக காட்சி அளிக்கிறது. அதன் அருகில் 50 பிஞ்சு குழந்தைகள் கல்வி பயிலும் அங்கன்வாடி மையம் அமைந்துள்ளது. இப்படி மதுக்கூடமாக மாறிக்கிடப்பது அதுவும் அங்கன்வாடி அருகே இப்படி இருப்பது மிகுந்த வேதனைக் குரியதாக உள்ளது. பயனற்ற இடத்தில் ரூபாய் 5 லட்சம் செலவில் கட்டப்பட்ட பயணியர் நிழற்குடை வீணடிக்கப்பட்டுள்ளது.
மாலை மற்றும் இரவு நேரங்களில் அக் கிராமத்தைச் (அக்கிரமம்) சார்ந்த இளைஞர்கள் இந்த நிழற்குடையை மதுபான கூடமாக பயன்படுத்தி வருவதால் , கிராமத்து பெண்கள் மற்றும் சிறுமிகள் அவ்வழியே செல்ல அச்சமடைந்துள்ளனர் .
இது குறித்து ஊராட்சி நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் மக்கள் பயன்பாடு உள்ள இடங்களில், மதுப் பிரியர்கள், பொது இடங்களில் மது அருந்துவதை திருமங்கலம் போலீசார் கட்டுப்படுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.