மதுரை அருகே துள்ளி குதிக்கும் முரட்டுக் காளைகளை பாசக்கயிற்றால் கட்டும் பெண்கள்
காளைகள் பதிவை ஆன்லைன் பதிலை தவிர்த்து கிராம நிர்வாக அலுவலர் மூலம் வழங்க காளை வளர்க்கும் பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
துள்ளிக் குதிக்கும் காளைகளை பாசக்கயிற்றில் கட்டி இழுக்கும் பெண்கள்
காளைகள் பதிவை ஆன்லைன் பதிவுகளை தவிர்த்து கிராம நிர்வாக அலுவலர் மூலம் வழங்க ஜல்லிக்கட்டு காளை வளர்க்கும் பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகா, அவனியாபுரம் அருகே உள்ளது வைக்கம் பெரியார் நகர் .இங்கு ,லூர்து மேரி என்பவர் ஜல்லிக்கட்டு காளையை வளர்த்து வருகிறார் . கலை என்ற பெயருடன் உள்ள இந்த காளையானது, மேரி மற்றும் அவரது மகள் பாத்திமா இருவருக்கு மட்டுமே கட்டுப்படுகிறது. மற்ற யாரையும் அருகில் நெருங்க விடுவதில்லை.
துள்ளி குதித்துவரும் காளையை பிடிக்க வரும் காளையர்களை துவசம் செய்ய முனைப்புடன் உள்ள காளையை, லூர்து மேரி பாசக் கயிற்றிலால் கட்டி வைத்துள்ளார். இதே பகுதியைச் சேர்ந்த இந்திராணி என்பவர் வளர்க்கும் ஜல்லிக்கட்டு காளையும், சீறிபாய்ந்தாலும் பெண்களிடம் அமைதியாக காணப்படுகிறது. நடப்பு, ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்குபெற கிராமத்தில் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்ய மிகவும் சிரமமாக உள்ளது என்றும், முன்போல் கால்நடைத்துறை மூலமாகவோ அல்லது கிராம நிர்வாக அலுவலர் மூலமாக ஜல்லிக்கட்டு காளைகள் பங்குபெற வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.