விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கூட்டம்!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-06-25 10:20 GMT

விடுதலை சிறுத்தை கட்சியின் கூட்டம்:

சோழவந்தான்:

மதுரை, சோழவந்தானில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மதுரை மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் சோழவந்தான் பிருந்தாவனம் திருமண மண்டபத்தில் நடைபெற்றது மதுரை மேற்கு மாவட்ட செயலாளர் ஊர்சேரி சிந்தனை வளவன் தலைமை தாங்கினார்.

கமல்ஹாசனின் கடின உழைப்பு..! இந்தியன் 2 டிரைலர்

  மேற்கு மாவட்ட துணை அமைப்பாளர் மு. காளிமுத்து, மேற்கு ஒன்றிய செயலாளர் ராதா பேரூர் செயலாளர் குமணன் , பேரூர் துணை அமைப்பாளர்கள் ஜெயச்சந்திரன் பா ரங்கசாமி, சிறப்பு அழைப்பாளர்கள் எல்லாளன், மாநில அமைப்பு செயலாளர் திருமாலின் மண்டல செயலாளர் மதுரை ஆகியோர் கலந்து கொண்டனர்.

  மேலவளவு விடுதலை களம் நோக்கி திருமாவளவன் வருகை முன்னிட்டு சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்து தீர்மானம் மற்றும் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் இரண்டு பாராளுமன்ற தொகுதிகள் வெற்றி பெற்று கட்சியின் அங்கீகாரம் பெற்றுள்ளதை வெற்றி விழாவாக கொண்டாடுவது உள்ளிட்ட, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Tags:    

Similar News