மதுரையில் நடைபெற்ற பல்வேறு குற்றச்சம்பவங்கள்: போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை

மதுரையில் நடந்த பல்வேறு குற்றச்சம்பவங்கள் குறித்து போலீஸார் வழக்குபதிந்து விசாரணை செய்து வருகின்றனர்

Update: 2022-03-09 07:45 GMT

மதுரையில் நடந்த பல்வேறு  குற்ற சம்பவங்கள் குறித்து போலீஸார் வழக்குபதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

அரசு வேலை வாங்கி தருவதாக  41 லட்சம் மோசடி-  2 பெண்களிடம் போலீஸ் விசாரணை:

அரசு வேலை வாங்கித் தருவதாக மூதாட்டியிடம் நாற்பத்தி ஏழு லட்சம் மோசடி செய்ததாக 2 பெண்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை விஸ்வநாதபுரம் சென்ட்ரல் பாங்க் காலனியைச் சேர்ந்தவர் பஞ்சவர்ணம் 60. இவரது மகளுக்கு அரசு வேலை பெற முயற்சி செய்து கொண்டிருந்தார். அவரிடம், அறிமுகமான ஸ்ரீ புகழ் இந்திரா, ரேணுகா என்ற 2 பெண்கள் தங்களுக்கு அரசியல் செல்வாக்கு இருப்பதாகவும், அரசு வேலை வாங்கித் தருவதாகவும் கூறியுள்ளனர்.

அவரது பேச்சை நம்பிய பஞ்சவர்ணம் 2021 ஆம் ஆண்டு ரூபாய் நாற்பத்தி ஏழு லட்சத்து 26 ஆயிரம் கொடுத்துள்ளார். ஆனால், கூறியபடி அவர்கள் வேலை வாங்கி தரவில்லை. ஏமாற்றியது தெரிய வந்தது. இதுகுறித்து, பஞ்சவர்ணம் தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் 2 பெண்கள் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை தெப்பக்குளத்தில் தண்ணீருக்குள் தவறி விழுந்த முதியவர் பலி:

மதுரை தெப்பக்குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்த சுமார் 55 வயது மதிக்கத்தக்க நபரின்  உடல் மிதந்ததைப் பார்த்த பங்கஜம் காலனியைச் சேர்ந்த பாண்டி என்பவர் கொடுத்த புகாரில், தெப்பக்குளம் போலீசார் இறந்தவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார் என்பது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோரிப்பாளையம் ஜம்புரோபுரம் மார்க்கெட்டில் இரு கோஷ்டிகளியடையே மோதல்: 12 பேர் மீது வழக்கு :

கோரிப்பாளையம் சம்புரோபுரம் மார்க்கெட்டில் இரு கோஷ்டிகளுக்கு இடையே நடந்த மோதலில்1 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து , 7 பேரை போலீசார் கைது செய்தனர். செல்லூர் பந்தல்குடி ஐந்தாவது தெருவைச் சேர்ந்தவர் சொக்கன்  மகன் பாலமுருகன்( 38.),  கோரிப்பாளையம் ஜம்புரோபுரம் மெயின்ரோட்டை சேர்ந்த பால்பாண்டி மகன் விக்னேஸ்வரன்( 21.) இவர்களுக்குள் முன் விரோதம் இருந்து வந்த நிலையில் ,இரு தரப்பினரும் கோஷ்டிகளாக மோதிக்கொண்டனர். இந்த சம்பவம் தொடர்பாக, பாலமுருகனும், விக்னேஸ்வரனும் தனித்தனியே தல்லாகுளம் போலீசில் புகார் செய்தனர் .

போலீஸார் இரு தரப்பினர் மீதும் வழக்குப் பதிவு செய்து ,குமரவேல் மகன் விநாயகம் (19,), பாலவிலாசம்மகன் காளீஸ்வரன்( 21,) பால்பாண்டிமகன் விக்னேஷ்வரன்( 21,) மதுரைவீரன்மகன் ரிஷிகுமார்( 19,) சொக்கர் மகன் பாலமுருகன்( 38,) முத்து மகன் அரவிந்த்(18,) வெற்றிக்குமார் மகன் தினேஷ்குமார்( 18 ,)ஆகிய இரு தரப்பிலும் 7 பேரை கைது செய்து, மொத்தம் 12 பேர் மீது வழக்கு ப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எஸ் எஸ் காலனி பொன்மேனியில் பெண்மீது தாக்குதல் நடத்திய வாலிபரை கைது:

பொன்மேனி ஹரிஜன் காலனியை சேர்ந்தவர் பாண்டி மனைவி ராமேஸ்வரி (31.). அதே பகுதியைச் சேர்ந்தவர் மணவாளன் மகன் சூர்யா( 20.). இவர் ராமேஸ்வரியை ஆபாசமாக பேசி சரமாரியாக தாக்கியுள்ளார். இந்த சம்பவம் குறித்து ,ராமேஸ்வரி எஸ் .எஸ் .காலனி போலீசில் புகார் செய்தார் .போலீஸார்  வழக்குப் பதிவு செய்து, அவரை தாக்கிய வாலிபர் சூர்யாவை கைது செய்தனர்.

மண்டேலா நகர்-  பெரியார்  பேருந்து நிலையம் சென்ற டவுன் பஸ்சில் இருந்த பெண்ணிடம் 20பவுன் நகை திருட்டு:

மதுரை மண்டேலா நகரிலிருந்து பெரியார் செல்லும் டவுன் பஸ்சில் பெண்ணிடம் 20பவுன் நகையை திருடிய செய்த 3 பெண்களை போலீசார் தேடி வருகின்றனர்.தஞ்சாவூர் சுப்பிரமணியன் கோவில் தெருவை சேர்ந்தவர் அழகர்சாமி மனைவி ருக்மணி( 36.) இவர், அருப்புக்கோட்டையில் உறவினர் வீட்டுக்கு சென்று வீட்டு, காதுகுத்து நிகழ்ச்சியில் கலந்துவிட்டு, ஊருக்கு திரும்பினார். அவர் மண்டலே நகரில் இறங்கி அங்கிருந்து பெரியார் பேருந்து நிலையம் செல்லும் பஸ்ஸில் பயணித்தார். அப்போது, அவரிடம் சுடிதார் அணிந்த மூன்று பெண்கள் கைக்குழந்தையுடன் பயணித்தனர். அவர்கள் ,ருக்குமணி தன் பேக்கில் வைத்து இருந்த 20 பவுன் தங்க நகையை  திருடி விட்டு தப்பி சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து, ருக்மணி அவனியாபுரம் போலீசில் புகார் செய்தார். இந்த திருட்டு குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகை திருடிய மூன்று பெண்களையும் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News