மதுரை சிந்தாமணி அருகே ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்த அரிசி ஆலைகளுக்கு சீல்
சிந்தாமணி அருகே சட்டவிரோதமாக 2 ரைஸ்மில்களில் பதுக்கி வைக்கப்பட்ட ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து ஆலைக்கு சீல் வைத்த வருவாய்த்துறை
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா, சிந்தாமணி அய்யனார்புரம் தனியாருக்கு சொந்தமான மற்றும் அரிசி ஆலை, கல்லம்பல் பகுதியில் உள்ள தனியார் அரிசி ஆலையில், சட்டவிரோதமாக ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக, மதுரை மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் வந்தது.
புகாரின் அடிப்படையில், வருவாய்த்துறையினர் மற்றும் மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் ஆகியோர் கொண்ட தனிப்படை அங்கு சென்றபோது, அரிசி ஆலையில் இருந்தவர்கள் தலைமறைவானதுடன், அந்த ஆலையை பூட்டிவிட்டு சென்றனர்.
பனையூர் கிராம நிர்வாக அலுவலர் உதவியுடன், பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, இரண்டு இடங்களிலும் 20 டன் ரேஷன் அரிசியை, மாவு அரைப்பதற்காக பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனடிப்படையில், 20 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த வருவாய்த் துறையினர், அரிசி ஆலையை பூட்டி சீல் வைத்தனர். தொடர்ந்து தலைமறைவான, உரிமையாளர் போலீசார் தேடி வருகின்றனர்.