பணிநிறைவு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் சங்க மாநில அளவிலான கூட்டம்..!

மதுரையில் பணி நிறைவு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் சங்க மாநில அளவிலான கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-09-02 14:58 GMT

மதுரையில், பணி நிறைவு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் சங்க கூட்டம்.

மதுரை: மதுரையில், ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் சங்க மாநிலக்கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பாக, மதுரையில் தனியார் கூட்ட அரங்கில் மாநில அளவிலான நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்திற்கு, சங்கத்தின் நிறுவனத் தலைவர் போஸ் தலைமை தாங்கினார் .மாநில துணைத்தலைவர் வாசுதேவன், தமிழ்நாடு ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் சங்க மாநில பொதுச் செயலாளர் ரவி ரங்கராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  கூட்டத்தில், சிறப்பு விருந்தினராக சர்வோதயத் தலைவரும் மற்றும் தமிழ்நாடு அரசின் பூமிநாத போர்டு உறுப்பினர் சுந்தராஜன் கலந்து கொண்டார்.

மேலும், இந்த கூட்டத்தில் முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வருகின்ற நவம்பர் மாதம் தேவகோட்டையில் எம்ஜிஆர் சிலை அருகில் நடைபெறும் 44 வது ,வி.ஏ.ஓ .தின விழாவை சிறப்பாக நடத்துவது என்றும், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு இறந்தால் அவர்களுக்கு நிதியுதவி ரு 50 ஆயிரம் மிகவும் தாமதமாக கிடைக்கிறது.

அதை உடனடியாக வழங்குவதற்கு அரசு வழிவகை செய்ய வேண்டும். மத்திய அரசின் மூத்த குடிமக்களுக்கு தொடர்வண்டியில் கட்டணத்தில் பயண சலுகை அறிவித்து செயல்படுத்தியதை கொரோனாவைக் காரணம் காட்டி நிறுத்திவிட்டது. எனவே, மத்திய அரசு மூத்தகுடி மக்கள் அதாவது ஒய்வூதியம் பெறும் அனைவருக்கும் தொடர்வண்டி கட்டணச் சலுகை 50% விழுக்காடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கை தீர்மானங்களாக  நிறைவேற்றப்பட்டன.

Tags:    

Similar News