அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மதுரையில் சாலை மறியல்

மதுரை அருகே, அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.;

Update: 2022-03-28 05:00 GMT

மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள். 

மதுரை டோக் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில்,  அடிப்படை வசதி கோரியும், வேகத்தடை அமைத்து தரக் கோரியும், அந்த பகுதி, பொது மக்கள் குடியிருப்பு நல சங்கம் சார்பில் ஒரு மணி நேரமாக  மறியல் நடைபெற்றது.

மதுரை நகரில் பல இடங்களில் சாலைகள் குண்டும் குழியுமாகவும், குடிநீருக்காக தண்ணீர் லாரிகளை எதிர்பார்க்கும் சூழ்நிலை உள்ளதாகவும், அடிப்படை வசதிகளை, மாநகராட்சி நிர்வாகம் நிறைவேற்றக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. 

Tags:    

Similar News