மதுரை அருகே கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு உயிருடன் மீட்பு
மதுரை அருகே கரடிக்கல் கிராமத்தில் கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு உயிருடன் மீட்கப்பட்டது.;
மதுரை மாவட்டம், ஆஸ்டின்பட்டி அருகே கரடிக்கல் என்ற கிராமத்தை சேர்ந்தவர் சுந்தர்ராஜ். இவருக்கு சொந்தமான பசுமாடு இன்று மேய்ச்சலுக்கு சென்றது. பச்சை பசேல் என காட்சியளித்த புல்தரையில் மேய்ந்து கொண்டிருந்த அந்த பசுமாடு ஆண்டிச்சாமி என்பவருக்கு சொந்தமான தோட்டத்து கிணற்றில் தவறி விழுந்து விட்டது.
கிணற்றில் பசுமாடு தொப் என விழுந்த சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் இதுபற்றி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் கிடைத்ததும், தீயணைப்புத் துறை விரைந்து வந்து, கிணற்றில் தவறி விழுந்த பசுமாட்டை உயிருடன் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர். பசுமாட்டின் உயிரை காப்பாற்றி தீயணைப்பு துறையினரை பொதுமக்கள் பாராட்டினர்.