மதுரையில் அம்மா உணவகத்தில் கருணாநிதி படம்: மாநகராட்சி ஆணையர் விளக்கம்:
மதுரை அம்மா உணவகத்தில் கருணாநிதி படத்தை உள்ளூர் பிரமுகர்கள் சேர்த்துள்ளார்கள், படம் வைக்கப்பட்டது குறித்து தகவல் தெரியாது;
மதுரை திருப்பரங்குன்றத்தில் அம்மா உணவகத்தில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா மற்றும் கருணாநிதி படம்
மதுரையில் அம்மா உணவகத்தில் கருணாநிதி படம் வைக்கப்பட்டது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் விளக்கம் அளித்துள்ளார்.
மதுரை ஜெய் ஹிந்திபுரத்தில் செயல்படும் அம்மா உணவகத்தில், பெயர் பலகையில் ஜெயலலிதா படம் இருந்து வருகிறது. இந்த நிலையில், முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி படம் இடம் பெற்றது.இது குறித்து சலசலப்பு ஏற்பட்டதாம். இதையடுத்து, மாநகராட்சி தரப்பில் கூறப்படுதாவது:மதுரை அம்மா உணவகத்தில் கருணாநிதி படத்தை உள்ளூர் பிரமுகர்கள் சேர்த்துள்ளார்கள். இந்த படம் வைக்கப்பட்டது குறித்து, எங்களுக்கு தகவல் தெரியாது; படத்தை வைக்க அரசு தரப்பில் எந்த அறிவுறுத்தலும் கிடையாது. உடனடியாக விசாரணை நடத்தப்படும் என்று மதுரை மாநகராட்சி ஆணையர் கார்த்திக்கேயன் விளக்கம் அளித்துள்ளார்.