மதுரையில் சிறுமி பாலியில் வன்கொடுமை: திமுக கிளை செயலாளர் கைது

மதுரையில் சிறுமியை பாலியில் வன்கொடுமை செய்ததாக திமுக கிளை செயலாளரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2022-03-28 03:20 GMT

பைல் படம்.

மதுரை, திருப்பரங்குன்றம் அருகே வலையங்குளம் பகுதியைச் சேர்ந்த 38 வயதான வீரணன் என்பவர் ரேடியோ செட் தொழில் செய்து வருகிறார். இவர் வலையங்குளம் பகுதி திமுக கிளை செயலாளராகவும் உள்ளார்.

திருப்பரங்குன்றத்திற்கு அருகே உள்ள ஒரு தம்பதியினருக்கு 16 வயதில் ஒரு மகள் மற்றும் ஒரு இளைய மகன் உள்ளனர். மகள் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11 வகுப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் சிறுமியின் தாயார் விபத்து ஒன்றில் இறந்ததாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தாயார் இறப்பிற்குப்பின் அவருடைய தந்தை சிறுமி மற்றும் சிறுமியின் தம்பி ஆகியோரின் படிப்புத் தொடர்பாக இணையதள கல்விக்காக தொலைபேசி எண் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார்.

அதன் மூலம் சிறுமியிடம் அடிக்கடி தொடர்புகொண்டு பேசி பழகிய வீரணன், பள்ளி சிறுமியிடம் திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தைக்கூறி, பாலியல் தொல்லை கொடுத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

Tags:    

Similar News