தூய்மை பணியாளர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்ட இடம் ஒப்படைப்பு

தூய்மை பணியாளர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் கட்ட சுகாதார ஊழியர் காலனி இடத்தினை, குடிசை மாற்று வாரியத்திடம் ஆணையாளர் இன்று ஒப்படைத்தார்.;

Update: 2021-07-24 12:31 GMT

குடிசை மாற்று வாரியத்திடம் இடத்தை ஒப்படைக்கும் மாநகராட்சி ஆணையாளர்.

மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகை அலுவலகத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான சுப்பிரமணியபுரம், மாநகராட்சி சுகாதார ஊழியர் காலனி இடத்தினை, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்திடம் ஆணையாளர் மரு.கா.ப. கார்த்திகேயன் ஒப்படைப்பு செய்தார்.

இந்த இடத்தில், கடந்த 2011 ம் ஆண்டு, துய்மை பணியாளர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் கட்ட தமிழக அரசால் ஆணை வழங்கப்பட்டது. இத்திட்டம் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வந்தது.

இந்நிலையில், சுப்பிரமணியபுரம், மாநகராட்சி சுகாதார ஊழியர் காலனியின் ஒரு  ஏக்கர் 30 சென்ட் பரப்பளவு கொண்ட மாநகராட்சிக்கு சொந்தமான இந்த இடத்தை,  தூய்மை பணியாளர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் கட்டும் திட்டத்திற்காக குடிசை மாற்று வாரியத்தின் அலுவலர்களிடம் மாநகராட்சி ஆணையாளர் மரு.கா.ப.கார்த்திகேயன் இன்று ஒப்படைப்பு செய்துள்ளார். 

இந்நிகழ்ச்சியில், துணை ஆணையாளர் சங்கீதா, தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய நிர்வாகப்பொறியாளர் முனியசாமி, உதவிப்பொறியாளர் சுதா ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News