மதுரையில் நடந்து சென்ற பெண்னின் கழுத்தில் அணிந்திருந்த செயின் பறிப்பு

மதுரையில் நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறித்த மர்ம நபர்களை போலீஸார் தேடிவருகின்றனர்;

Update: 2022-02-15 09:45 GMT

மதுரையில்  சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் செயினை பறித்துச் சென்ற  மர்ம நபரை  போலீஸார் தேடிவருகின்றனர்.

மதுரை பைபாஸ் ரோடு சொக்கலிங்க நகர் பகுதியை சேர்ந்த பிரியதர்ஷினி( 23 ). சக்திவேலம்மாள் நகர் திருவள்ளூர் மன்றம் அருகில், வசித்து வரும் எஸ்.எஸ்.காலனி, கம்பர் தெருவில் இருந்து இன்று காலை 8 மணிக்கு நடந்து வேலைக்கு சென்று சென்று கொண்டிருந்தார் . அப்பொழுது, பைபாஸ் ரோடு ஐபேகோ ஐஸ் கிரீம் பக்கத்தில் சக்தி வேலம்மாள் நகரில் உள்ள திருவள்ளுவர் மன்றம் அருகில் நடந்து செல்லும்போது, பிரியதர்ஷினி கழுத்தில் இருந்த 1/1/4 தங்கச்சங்கிலியை இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்  பறித்துவிட்டு  மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றார்.  தகவல் அறிந்த எஸ் எஸ் காலனி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு தப்பி ஓடிய  திருடர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News