மதுரை அருகே வீட்டில் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை
மதுரை தனக்கன்குளத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் தங்கம்,அரை கிலோ வெள்ளி மற்றும் பணம்40 ஆயிரம் கொள்ளை;
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா தனக்கன்குளம் பி.ஆர்.சி. காலனி சேர்ந்த காமராஜ் இவர் சென்ற மாதம் 26 ஆம் தேதி தனது வீட்டை பூட்டி விட்டு வேலூரில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இதனை நோட்டமிட்ட, மர்ம நபர் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 7 பவுன் தங்கம், அரை கிலோ வெள்ளி மற்றும் 39,700 ரூபாய் பணத்தை திருடிச் சென்றுள்ளார்.
இந்த நிலையில், காமராஜ் வீட்டில் வந்து பார்த்த போது பின்பக்க கதவு உடைத்து, பீரோவில் இருந்த தங்கம் மற்றும் வெள்ளி பணம் உள்ளிட்ட பொருட்களை திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து, திருநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.