திருப்பரங்குன்றம் அருகே சாலை அமைக்க பூமி பூஜை..!
திருப்பரங்குன்றம் அருகே புதிதாக அமைக்கப்படவுள்ள சாலை திட்டத்திற்கு பூமி பூஜை நடந்தது.
மதுரை:
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகா, நிலையூர் 1வது ஊராட்சிக்குட்பட்ட கூத்தியார்குண்டு கிராமத்தில் கண்மாய் கரை சாலை பழுதடைந்து 25 ஆண்டுகளுக்கு மேலாகி விட்ட நிலையில், தற்போது 49 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில் மெட்டல் சாலை அமைக்கும் திட்டத்தை, ஊராட்சி மன்றத் தலைவர் பசும்பொன், வார்டு உறுப்பினர்கள் மற்றும் கவுன்சிலர் உமாதேவி ஆகியோர் முன்னிலையில் ஒன்றிய தலைவர் வேட்டையன் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் , இளைஞரணி அமைப்பாளரும், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கருவேலம்பட்டி வெற்றி, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் கருணாநிதி,மாவட்டக் கவுன்சிலர் ராஜசேகரன், கிளைச் செயலாளர்கள் ராஜா கண்ணன், சோணைமுத்து, அய்யனார், முருகன், அக்னி சரவணன், நிலையூர் நித்தியானந்தம், குருமூர்த்தி மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த சாலை அமைப்பதற்கு பல ஆண்டு காலமாக இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தது வந்தனர். ஆனாலும் ஆட்சிகள் மாறியபோதும் கூட இந்த சாலை கிடப்பில் கிடந்தது. தற்போது இந்த சாலைக்கு விடிவுகாலம் பிறந்துவிட்டது. பல நாட்கள் நாங்கள் இந்த சாலையில் செல்வதற்கு பல துன்பங்களை அனுபவித்தோம். இனிமேல் அந்த தொல்லைகள் இருக்காது என்று இப்பகுதி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.