அலங்காநல்லூரில் பட்டாக்கத்தியில் கேக் வெட்டி கொண்டாட்டம்: 2 பேர் கைது
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே, பட்டாக்கத்தியில் கேக் வெட்டி கொண்டாடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.;
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே குமாரம் கிராமத்தை சேர்ந்தவர், ஜெயசூர்யா, வயது 19. திருப்புவனத்தைச் சேர்ந்த பிரவீன்குமார், வயது 21. இருவரும், குமாரம் மந்தை பகுதியில் பிறந்தநாள் கொண்டாடியுள்ளனர். அப்போது, பட்டாக்கத்தியால் கேக் வெட்டியதுடன், அதனை படம் பிடித்து வாட்ஸ் அப்பில் பரப்பியதாக கூறப்படுகிறது.
இது குறித்து, தகவல் அறிந்த போலீசார் விசாரணை நடத்தினர். ஆயூதம் பயன்படுத்தி, மிரட்டும் தொனியில் நடந்து கொண்டது, கத்தியில் கேக் வெட்டியதற்காக, அவர்கள் இருவரையும் அலங்காநல்லூர் போலீசார் கைது செய்து, வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.