அலங்காநல்லூர் அருகே தொட்டிச்சி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழா..!
அலங்காநல்லுர் அருகே பாலமேட்டில் ஶ்ரீ ஏர்ரம்மாள், தொட்டிச்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
அலங்காநல்லூர் :
மதுரை மாவட்டம் ,பாலமேடு அருந்ததியர் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ ஏர்ரம்மாள் அம்மன், தொட்டிச்சி அம்மன், வலம்புரி விநாயகர், சந்தன கருப்பன் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
இரண்டு நாட்கள் நடந்த இந்த யாகசாலை பூஜையில், மங்கல இசை முழங்க விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, மகா கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, மகா பூர்ணாவூதி தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து ,யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடாகி கோவிலை சுற்றி வலம் வந்து பின் கோபுர உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, திருக்கோவில் பங்காளிகள் செய்திருந்தனர்.
தமிழகத்தில் உள்ள ஆலயங்களில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கோவில் புனரமைக்கப்பட்டு குடமுழுக்கு நடத்தப்படுவது வழக்கம். அதன்படி ,தமிழகத்தில் உள்ள கோவில்கள் புதுப்பிக்கப்பட்டு குடமுழுக்கும் நடந்து வருகிறது. அவ்வாறு, குடமுழுக்கு செய்யப்படுவதால், ஆலயங்களில் புதிய சக்திகள் ஏற்படும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.
கோவில்களில், திருப்பணிகள் செய்வதற்கு முன்பு கமிட்டிகள் அமைக்கப்பட்டு பின்னர் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இறைவன் ஒளியே உருவாகத் திகழ்பவர். ஜோதி எங்கும் நிறைந்து இருந்தாலும் கல்லிலே அதிகம் உள்ளது. ஒரு கல்லை மற்றொரு கல் மீது உரசினால் நெருப்பு வருவதை காண்கிறோம். ஆதலால் கற்களுக்குள் ஒரு சக்தி அடங்கிக் கிடக்கிறது. ஆகவேதான் தெய்வ வடிவங்களைக் கல்லினால் செதுக்கி அமைக்கிறார்கள்.
இப்படியாக கல்லினாலும், மண்ணினாலும், கதையினாலும், மனிதரால் உருவாக்கப்பட்டவை விக்கிரங்களாகும். அவற்றிற்குத் தெய்வ சக்தியை தூண்டுவதற்காகச் செய்யப்படும் பல கிரியைகளில் ஒன்றுதான் கும்பாபிஷேகம்.