நெல் மூட்டைகளை நேரடியாக கொள்முதல் செய்ய வலியுறுத்தி விவசாயிகள் சாலை மறியல்

விவசாயிகள் சாலையில் நெல்லை குவித்து டிராக்டர்களுடன் சாலை மறியல். செய்ததால் மாணவ மாணவிகள் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்

Update: 2021-12-10 08:15 GMT

சோழவந்தான்  அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

நெல்மூட்டைகளை அரசு அதிகாரிகள் நேரடியாக கொள்முதல் செய்ய  வலியுறுத்தி  விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை சோழவந்தான் அருகே, ஊத்துக்குளி கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையங்களில் உள்ள நெல்களை அதிகாரிகள் நேரில் கொள்முதல் செய்ய வலியுறுத்தி, சாலைகளில் நெல் குவியல்களை அமைத்து விவசாயிகள் பஸ் மறியல் ஈடுபட்டனர்.

மதுரை, சோழவந்தான் அருகே ஊத்துகுளியில் அரசு கொள்முதல் நிலையத்தில் அதிகாரிகள் விவசாயிகளின் நெல்லை கொள்முதல் முதல் செய்ய மறுப்பதாக கூறி, சோழவந்தான் பகுதி விவசாயிகள் சாலையில் நெல்லை குவித்து டிராக்டர்களுடன் சாலை மறியல். செய்ததால், பள்ளி செல்லும் மாணவ மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்வோர் பாதிக்கப்பட்டனர்.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே ஊத்துகுளியில் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் கூடுதலாக கமிசன் கேட்கும் பிரமுகர்களும், அதிகாரிகளும் விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்ய மறுத்துள்ளனர். இதனால், வேதனையடைந்த விவசாயிகள், சோழவந்தான் சாலையில் நெல்லை குவித்து டிராக்டர்களுடன் சாலைமறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து, சோழவந்தான் தென்கரை கூட்டுறவு வங்கி செயலாளர் செல்வம், மற்றும் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி நாளை காலைக்குள் கொள்முதல் செய்வதாக உறுதி அளித்ததை தொடர்ந்து, தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டு சென்றனர். இந்த சாலைமறியலால், சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பொதுமக்களும், பள்ளி மாணவர்களும் அவதிக்குள்ளாகினர். 

இது குறித்து, விவசாயிகள் கூறும்போது:எங்கள் கிராமத்தில் சுமார் 1200 ஏக்கர் பயிரிட்டு இருந்த நெல் சுமார் 5000 மூட்டைகளுக்கு மேல் கொள்முதல் நிலையங்களில் கடந்த முப்பது நாட்களுக்கும் மேலாக தேங்கியுள்ளது அதிகாரிகள் மற்றும் ஆளுங்கட்சியினரின் தூண்டுதலால், நெல்கொள்முதல் செய்யாமல், இருந்து வருகின்றனர். மேலும், ஒரு மூட்டை நெல் கொள்முதல் செய்ய ரூபாய் 60 கேட்பதாகவும் 60 ரூபாய் கொடுத்த பின்பும் கொள்முதல் செய்யப்படவில்லை. 

ஒரு மூட்டை 840 ரூபாய்க்கு எடுப்பதாகவும், சுமார் 5000 மூட்டை நெல் மூலம் சுமார் 40 லட்சம் மதிப்புள்ள நெல் மூட்டைகள் தேங்கி உள்ளதால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தொடர் மழை பெய்து வருவதால், நெல்கள் முளைக்கக் கூடிய சூழல் இருப்பதாகவும் இதை அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் கொள்முதல் செய்ய மறுப்பதாகவும் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

இரண்டு நாட்களில் கொள்முதல் செய்யவில்லை என்றால், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திற்கு நெல் மூட்டைகள் உடன் சென்று முறையிடப் போவதாகவும் தெரிவித்தனர். மேலும், இடைத்தரகர்கள் மூலம் வியாபாரிகளுக்கு நெல்லை  கொள்முதல் செய்வதாகவும்,  விவசாயிகளின் நெல்லை எடுக்க மறுப்பதாகவும் அதிகாரிகள் மீது குற்றம் சாட்டினர். விவசாயிகளின் சாலை மறியலால் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து  பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News