சோழவந்தான் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி..!
சோழவந்தான் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சோழவந்தான் :
மதுரை மாவட்டம், சோழவந்தான் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு திமுக ஒன்றிய செயலாளர் பசும்பொன்மாறன் தலைமை வகித்து, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவியர் 295 பேருக்கும் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 47 பேருக்கும் விலையில்லா மிதி வண்டிகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சிக்கு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தீபா, ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி மன்றத் தலைவர் ஜெயராமன், திமுக பேரூர் செயலாளர் சத்யபிரகாஷ், துணைத் தலைவர் லதா கண்ணன், பேரூர் துணைச் செயலாளர்கள் ஸ்டாலின், கொத்தாளம் செந்தில், செல்வராணி ஜெயராமச்சந்திரன்,ஒன்றிய கவுன்சிலர்கள் ரேகா வீரபாண்டி, வசந்த கோகிலா சரவணன், திருவேடகம் ஊராட்சி மன்றத் தலைவர், முள்ளிப்பள்ளம் ஊராட்சி மன்ற துணை தலைவர் சோலை மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மாணவர்களின் கல்வியில் மாற்றம் ஏற்படுத்துவதற்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை கொண்டுவந்துள்ளது. அதில் மாணவிகள் உயர்கல்வி கற்பதற்கு உதவித்தொகை வழங்குதல், மடிக்கணினி வழங்குதல், மிதிவண்டி வழங்குதல், மதிய உணவு வழங்குதல் என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அதில் ஒன்றுதான் விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டம். கிராமங்களில் இருந்தும், நகரின் பிற இடங்களில் இருந்தும் நடந்து வந்தது கல்வி கற்கும் நிலையை மாற்றுவதற்காக கொண்டுவந்த திட்டமாகும். கிராமத்து மாணவ மாணவிகள் பேருந்து வசதி இல்லாததால் பல கிலோமீட்டர்கள் நடந்து வந்து கல்வி கற்றனர். மேலும் அவர்கள் நடந்து வருவதால் சரியான நேரத்திற்கும் வர முடியாமல் தவித்தனர்.
இதைக்கருத்தில் கொண்டு இந்த திட்டத்தின்படி மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டி வழங்க முடிவெடுக்கப்பட்டது. அதன்படி இன்றும் இந்த திட்டம் பயனுள்ள திட்டமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.