Palamedu Jallikattu-பாலமேடு ஜல்லிக்கட்டுக்கு முகூர்த்தக்கால் பூஜை..!
மதுரை மாவட்டம், பாலமேட்டில் ஜல்லிக்கட்டு விழா முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி இன்று நடந்தது.;
அலங்காநல்லூர்,ஜன:7.
மதுரை மாவட்டம், பாலமேட்டில்,ஜனவரி 16ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாட்டு பணிகள் கடந்த ஒரு வார காலமாக நடைபெற்று வருகிறது.
இதில், அங்கு அமைந்துள்ள மஞ்சமலை வாடிவாசல் பகுதி முழுவதும் சுத்தப்படுத்தப்பட்டு வாடிவாசல் பார்வையாளர் மாடம் ஆகியவை வர்ணம் பூசும் பணி முடிவடைந்துள்ளது. இந்த நிலையில், விழா மேடை மற்றும் இரண்டு அடுக்கு தடுப்பு வேலி பார்வையாளர் மேடை ஆகிய அமைப்பதற்கான உள்ளிட்ட விழா நிகழ்ச்சிகள் தொடங்குவதற்காக முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி இன்றுகாலை 10 மணி அளவில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு, பேரூராட்சித் தலைவர் சுமதி பாண்டியராஜன், தலைமை தாங்கினார். விழாக் கமிட்டி நிர்வாகிகள் மலைச்சாமி, பிரபு, ஜோதி தங்கமணி. உறுப்பினர்கள் சங்கரலிங்கம் ஜெயராமன், கிருஷ்ணன், குமரேசன், சுரேஷ், சந்திரன், ராஜமாணிக்கம், முத்துச்செல்வம், மற்றும் துணைத் தலைவர் ராமராஜ், ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி செயல் அலுவலர் தேவி, வரவேற்றார் .
சிறப்பு அழைப்பாளர்களாக திமுக வடக்கு மாவட்ட அவைத் தலைவர் எம்.ஆர்.எம். பாலசுப்பிரமணியன், நகரச் செயலாளர் மனோகர வேல்பாண்டியன், மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு துணைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, உள்ளிட்ட விழாக்கமிட்ட நிர்வாகிகள், பேரூராட்சி கவுன்சிலர்கள், காவல்துறையினர் உள்ளிட்ட பொதுமக்கள் பலர் இந்த நிகழ்ச்சிகள் கலந்து கொண்டனர்.
ஜல்லிக்கட்டு என்பது தமிழ் கலாச்சாரத்தின் ஒரு முக்கிய அம்சமாகும், இது உள்நாட்டு காளை இனங்களை பாதுகாப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு இந்த பாரம்பரிய விளையாட்டிற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக தமிழகத்தைச் சேர்ந்த மக்கள் திரண்ட சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற மாபெரும் போராட்டத்தின் போது நாடு முழுவதும் ஜல்லிக்கட்டு பக்கம் திரும்பியது. ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு விழா பொங்கல் சீசனில் ஜனவரி 15 முதல் 17 வரை நடைபெறும். , தமிழ்நாட்டில் அதன் ஆழமான வேரூன்றிய முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.
குறிப்பாக தமிழ்நாட்டின் குறிப்பிட்ட மாவட்டங்களான மதுரை, திருச்சிராப்பள்ளி, தேனி, புதுக்கோட்டை மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு மிகவும் பிரபலமானது. பொங்கல் அறுவடைத் திருவிழாவின் ஒருங்கிணைந்த ஜல்லிக்கட்டு ஒரு போட்டி மட்டுமல்ல, இயற்கையின் கொண்டாட்டமாகவும், அபரிமிதமான விளைச்சலுக்கான நன்றியின் வெளிப்பாடாகவும் உள்ளது. இந்த பண்டிகை பாரம்பரியத்தில் கால்நடை வழிபாடு முக்கிய பங்கு வகிக்கிறது.