மதுரை : போலீஸிடம் கத்தியைக் காட்டி மிரட்டல் விடுத்த ரௌடி உள்பட 2 பேர் கைது

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே ஆயுதங்களுடன் போலீசை மிரட்டிய ரௌடி யை போலீஸார் கைது செய்தனர்;

Update: 2021-10-02 03:53 GMT

ஆயுதங்களுடன் போலீசை மிரட்டிய பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய   ரௌடியை போலீஸார் கைது செய்தனர்

தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின்படி, மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் ஆலோசனையின் பேரில், சமயநல்லூர் துணைக் கண்காணிப்பாளர் பாலசுந்தர், சோழவந்தான் இன்ஸ்பெக்டர் சிவபாலன், சோழவந்தான் பகுதியில் ரவுடிகளை கண்காணித்து கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்

முள்ளிப்பள்ளம் அருகே போலீசார் சென்று கொண்டிருந்த பொழுது, தென்கரையைச் சேர்ந்த சரவணபெருமாள்(19). என்பவர் போலீசாரிடம் தகராறு செய்து ஆயுதங்களை காட்டி மிரட்டியபோது   போலீஸார் மடக்கி பிடித்து கைது செய்து அவரிடமிருந்து கத்தியை பறிமுதல் செய்தனர்.  இதைப்போல்,  முள்ளிப்பள்ளம் பகுதியில் வழிப்பறி செய்து கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த   லோகேஷ்(19)  என்பவரையும் கைது செய்து அவரிடமிருந்து அரிவாளை போலீசார் பறிமுதல் செய்தனர் .இது குறித்து காடுபட்டி சப் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

Tags:    

Similar News