சோழவந்தான் பெருமாள் கோயிலில் சித்திரைத் திருவிழா: மண்டகப்படிதாரர்கள் வழிபாடு
மதுரை மாவட்டம், சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் பெருமாள் கள்ளழகர் ஆற்றில் இறங்கினார்;

மதுரை மாவட்டம், சோழவந்தான் ஜெனக நாராயணபெருமாள்கோயில் சித்திரை திருவிழாவில் மண்டகப்படிதாரர்கள் நடத்திய சிறப்பு பூஜை
சித்திரைத் திருவிழா: மண்டகப்படிதாரர்கள் சிறப்பு வழிபாடு
மதுரை மாவட்டம், சோழவந்தான் , எம்.வி.எம். மருது மண்டகப்படியில் அருள்மிகு ஸ்ரீ கள்ளழகர் எழுந்தருளினார். இதில் பாஜக மாநில விவசாய அணி துணை தலைவர் மணி முத்தையா, திமுக கவுன்சிலர்கள் மருது பாண்டியன், வள்ளிமயில் உள்ளிட்ட எம். வி.எம் குழுமத்தினர் பங்கேற்றனர். முன்னதாக, சோழவந்தான் ஜெனக நாராயணப் பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்தில் மண்டகப்படியில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.