நாம் தமிழர் கட்சி சார்பில் ரத்த தான முகாம்
சோழவந்தானில் நாம் தமிழர் கட்சி சார்பில் இரத்ததான முகாம் நடைபெற்றது;
சோழவந்தானில் தமிழ் தேசியத் தலைவர் பிரபாகரன் பிறந்த நாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி சார்பாக ரத்ததான முகாம் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது
சோழவந்தான் நாடார் உறவின்முறை மகளிர் சமுதாயக்கூடத்தில் முகாம் நடந்தது முகாமில் மதுரை அரசு ராஜாஜி அரசு மருத்துவமனை ரத்த சேமிப்பு வங்கி மருத்துவ குழுவினரிடம் நாம் தமிழர் கட்சி மற்றும் பொதுமக்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் ரத்தம் வழங்கினார்கள்
இதில் நாம் தமிழர் கட்சி சோழவந்தான் தொகுதி செயலாளர் சக்கரபாணி தலைவர் சங்கிலி முருகன் பொருளாளர் சதீஷ்குமார் ஆகியோர் தலைமை தாங்கினர் வாடிப்பட்டி ஒன்றிய செயலாளர் செல்லப்பாண்டி தொகுதி துணை செயலாளர் முத்தீஸ்வரர் சோழவந்தான் நகரத் தலைவர் சங்கர் நகர செயலாளர் கார்த்திகேயன் மற்றும் தொகுதி பொருளாளர் குணசேகர பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
இதைத் தொடர்ந்து உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது இதில் சோழவந்தான் தொகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்