சோழவந்தானில் கால்வாய் ஆக்கிரமிப்பால் 100 ஏக்கர் விவசாயம் பாதிக்கும் அபாயம்
ஆக்கிரமிப்பில் உள்ள கால்வாய்களை அகற்ற வேண்டும் என்று விவசாயிகள் சமூக ஆர்வலர்கள் உட்பட பலர் கேட்டுக் கொண்டனர்;
சோழவந்தானில் கால்வாய் ஆக்கிரமிப்புகளால் சுமார் 100 ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மதுரை மாவட்டம், சோழவந்தான் - வாடிப்பட்டி சாலை, ஆண்டியப்பமேடு செல்லும் பாதையில் இருந்து கிளை கால்வாயாக உருவாகும் குட்டதட்டி மடையில் இருந்து செல்லும் கால்வாய் சுமார் 6 அடி அகலம் உள்ளது. இந்த கால்வாயானது தற்போது, முற்றிலுமாக மணல் திட்டு போல காணப்படுவதால், சுமார் 50 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி கிடைக்காமல் தரிசு நிலங்களாக மாறும் அபாயம் உள்ளது.
மேலும், இதன் மூலம் விவசாயத்தை நம்பி உள்ள சுமார் 200 விவசாய குடும்பங்கள் பாதிக்கப்படுவதால், இதனைக் கருத்தில் கொண்டு, பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு, இந்த கால்வாயை தூர்வாரி தர வேண்டும் என்று விவசாயிகள் சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கின்றனர்.மேலும், கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று விவசாயிகள் சமூக ஆர்வலர்கள் உட்பட பலர் கேட்டுக் கொண்டனர்.
இதுகுறித்து, கிராம காவல் தனம் என்பவர் கூறும் போது :இந்த குட்டதட்டி கால்வாயானது இரண்டு மாடுகள் சென்று வரக்கூடிய அகலமான கால்வாயாக இருந்தது தற்போது ஆக்கிரம்பாளர்களின் பிடியில் சிக்கி இரண்டடிக்கும் குறைவாக சுருங்கி விட்டது.ஆகையால், மாவட்ட நிர்வாகமும் பொதுப்பணித்துறை அதிகாரிகளும் நேரில் பார்வையிட்டு ஆத்திரரிப்புகளை அகற்றி கால்வாயை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும்
மேலும் இதன் மூலம் முல்லை பாசன கால்வாயில் இருந்து வரும் விவசாய நீர் தேனூர் கால்வாய் வரை சென்று சேர்கிறது. இந்த கால்வாய் மூலம், சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது . இதனை நம்பி சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இருக்கின்றன .ஆகையால் ,காலம் தாழ்த்தாமல் பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு கால்வாயை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
நில ஆக்கிரமிப்புக்கும் அத்துமீறலுக்கும் உள்ள வேறுபாடு: சில நேரங்களில் மக்கள் நில ஆக்கிரமிப்பை அத்துமீறல் என்று குழப்புகிறார்கள். இருப்பினும், இவை இரண்டும் வெவ்வேறு சொற்கள். அத்துமீறல் என்பது ஒரு நபர் மற்றொரு நபரின் சொத்துகளை சட்டவிரோதமாக பயன்படுத்தும் ஒரு செயலாகும். அதே சமயம், அத்துமீறி நுழைவது என்பது சொத்து உரிமையாளரின் அனுமதியின்றி அல்லது எதிராக ஒருவரின் சொத்துக்குள் நுழைவது. மூன்று வகையான அத்துமீறல்கள் உள்ளன. ஒரு நபர் முன்பு செய்த ஒரு செயலைச் செய்ய தடை விதிக்கப்பட்டால், ஒரு உரிமையாளர் அவர்களின் அசையும் சொத்தைப் பயன்படுத்தி தொந்தரவு செய்கிறார் ஒரு நபர் மற்றொரு நபரின் சொத்து அல்லது நிலத்தை உடைமை செய்யும் நோக்கத்துடன் ஆக்கிரமிக்கிறார் என்று அர்த்தம்.