வாடிப்பட்டி அருகே புகையிலை பொருட்களை கடத்திய 3 பேர் கைது
காய்கறி மூடைகளுக்கும் இடையே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை உள்ளிட்ட பொருள்கள்பதுக்கி வைக்கப்பட்டிருந்தன;
வாடிப்பட்டி அருகே நடத்தப்பட்ட வாகன சோதனையில் 300 கிலோ புகையிலை பொருட்களை கடத்தி வந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே வாகன சோதனையில், போது வேனில் கடத்தி வந்த 300 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்து 3 பேரை போலீஸார் கைது செய்தனர். மதுரை மாவட்டம், வாடிப்பட்டி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முருகேசன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சேர்வை, போலீஸ் ஏட்டுக்கள் முகிலன், குடியரசன் ஆகியோர் திண்டுக்கல் மதுரை சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
வாடிப்பட்டி கால்நடை மருத்துவமனை முன்பு வாகன சோதனை செய்த போது, கிருஷ்ணகிரியில் இருந்து மதுரை நோக்கி வந்த வேனை நிறுத்தி சோதனை செய்த போது காய்கறி மூடைகளுக்கும் இடையே வெள்ளை சாக்கில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை உள்ளிட்ட பலவகையான போதைப் பாக்குகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 300 கிலோ எடை உள்ள போதை பொருட்கள் போலீசார்பறிமுதல் செய்தனர்.
இது சம்பந்தமாக, வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கனகசபாபதி வழக்குப் பதிவு செய்து, போதை பொருளை கடத்தி வந்த கிருஷ்ணகிரி தேன்கனிக்கோட்டையைச் சேர்ந்த கௌரப்பன்(21) ,பேரையூர் சென்ராஜ் (45) கிருஷ்ணகிரி லட்சுமிபுரத்தை சேர்ந்த சத்தியமூர்த்தி (20) ஆகிய மூன்று பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.