மதுரை மாவட்ட கோவில்களில் தொடங்கிய சிவராத்திரி விழா

தனிச்சியம் முத்தையா கோவிலில், சிவராத்திரி முன்னிட்டு சிறப்பு யாகத்துடன், விழா தொடங்கியது.

Update: 2024-03-07 14:29 GMT

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே தனிச்சியம் முத்தையா கோவிலில், சிறப்பு பூஜை.

மதுரை மாவட்டத்தில் கிராமங்களில் சிவராத்திரி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும். மதுரை மாவட்டத்தில், உள்ள தனிச்சியம் முத்தையா கோவிலில், சிவராத்திரி முன்னிட்டு சிறப்பு யாகத்துடன், விழா தொடங்கியது. கோவில் பங்காளிகள் முத்தையா சுவாமிக்கு, சிறப்பு பூஜைகள் செய்து, விழாவை துவக்கினர்.

இதேபோல, மதுரை மாவட்டத்தில், சோழவந்தான் வால குருநாதர் சுவாமி, பிரளயநாதர் சிவன் ஆலயம், திருவேடகம் ஏடகநாத சுவாமி, தென்கரை மூலநாதர் சுவாமி, துவரிமான் மீனாட்சி சுந்தரேச திருக்கோவில், தெப்பக்குளம் முத்தீஸ்வரர் திருக்கோவில், மதுரை அண்ணா நகர், தாசில்தார் நகர் சித்தி விநாயகர் ஆலயம், வர சித்தி விநாயகர் ஆலயம், சௌபாக்கிய விநாயகர் கோவில், அண்ணாநகர் சர்வேஸ்வர ஆலயம் உள்ளிட்ட கோயில்களில் சிவராத்திரி முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற உள்ளது. சோழவந்தான் சிவன் ஆலயத்தில் வெள்ளிக்கிழமை பிரதோஷ பூஜை தொடர்ந்து, நான்கு கால சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

இதை ஒட்டி, சிவபெருமானுக்கும், அம்பாளுக்கும் பக்தர்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்படும். இதே போன்று, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கருமாத்தூர் மூனுசாமி திருக்கோவில், ஒச்சாண்டம்மன் திருக்கோவில் ஆகிய கோயில்களிலும் சிவராத்திரி விழா மிக சிறப்பாக நடைபெறும். சிவராத்திரி விழாவானது, கிராமங்களில் உள்ள அனைத்து கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகிகள் சிறப்பாக செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News