மதுரை சௌபாக்யா விநாயகர் ஆலயத்தில் வரும் 21 ல் ராகு - கேது பெயர்ச்சி மஹாயாகம்

இம்மாதம் 21 -ம் தேதி திங்கள்கிழமை காலை 11 மணிக்கு ராகு- கேது பெயர்ச்சி விழா ஹோமம் நடைபெறுகிறது

Update: 2022-03-18 14:30 GMT

பைல் படம்

மதுரை சௌபாக்யா விநாயகர் ஆலயத்தில் ராகு-கேது பெயர்ச்சி விழா வரும் திங்கள்கிழமை நடைபெறுகிறது.

மதுரை மேலமடை தாசில்தார் நகரில் அருள்பாலிக்கும் சௌபாக்யா விநாயகர் ஆலயத்தில், இம்மாதம் 21-ம் தேதி திங்கள்கிழமை காலை 11 மணிக்கு ராகு- கேது பெயர்ச்சி விழா ஹோமம் நடைபெறுகிறது. ராகு பகவான் ரிஷப ராசியிலிருந்து- மேஷ ராசிக்கும், கேது பகவான்- விருச்சிக ராசியிலிருந்து, துலாம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.

இதையொட்டி, இக் கோயிலில்,ஆம் மாதம் 21-ம் தேதி காலை 11 மணிக்கு ராகு-கேது ப்ரீதி ஹோமமும், அதைத் தொடர்ந்து சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.பரிகார ராசிகளான, மேஷம் , ரிஷபம், கடகம், கன்னி, துலாம், விருச்சிகம், மகரம், மீனம் ஆகிய ராசி நேயர்களுக்கு சிறப்பு அர்ச்சனைகள் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை, ஆலய நிர்வாகிகள், கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர். பூஜை தொடர்புக்கு..9360413508, என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Tags:    

Similar News