மதுரை நகரில் கொட்டும் மழையிலும் ஜவுளிக் கடைகளில் குவிந்த பொதுமக்கள்
மதுரை மேலமாசி வீதி, கீழவாசல், விளக்குத்தூண் ஆகிய பகுதிகளில் ஜவுளிக் கடையில் நீண்ட வரிசையில் நின்று துணிகளை வாங்கினர்;
மதுரையில் கொட்டும் மழையிலும் தீபாவளிக்கு புத்தாடை மற்றும் பொருட்களை வாங்க மக்கள் திரண்டு வந்தனர்.
தீபாவளி பண்டிகையொட்டி, மதுரையில் மழை தொடர்ந்து பெய்து வந்தாலும், பொருட்களை வாங்க மக்கள் கடைகள் முன்பாக குவிந்தனர். மதுரையில், மேலமாசி வீதி, கீழவாசல், விளக்குத்தூன் ஆகிய பகுதிகளில் உள்ள ஜவுளிக் கடையில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று துணிகளை வாங்கினர். கூட்டம் அதிகமாக இருப்பதால், மதுரை நகர போலீஸார் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மதுரை நகரில், கடந்த இரண்டு நாள்களாக, மழை விட்டு, விட்டு வருவதால், சாலையோர வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.மதுரையில், தீபாவளியை கொண்டாட, சாலையோ கடைகளில் விற்கும் மலிவுவிலை ஜவுளி, வீட்டு உபயோக பொருட்கள் வாங்க தெற்குமாசி வீதி, விளக்குத்தூண் மீனாட்சியம்மன் கோயில் சித்திரைவீதிகளில் பொதுமக்கள் குவிந்தனர்.மழையால், மதுரை நகரில் பல இடங்களில், சாலைகளில் மழைநீர் குளம் போல தேங்கியுள்ளன.