இன்று மதுரை- சென்னை மெமு ரயில் இயக்கம்..!

மதுரையிலிருந்து சென்னைக்கு முதல் முறையாக இன்று இரவு மெமு ரயில் சேவை தொடங்குகிறது.

Update: 2024-11-03 06:49 GMT

ரயில் -கோப்பு படம் 

நான்கு நாட்கள் தீபாவளி பண்டிகை விடுமுறை முடிந்து இன்று தென்மாவட்டங்களில் இருந்து பல லட்சம் பேர் சென்னை திரும்புகின்றனர். இவர்களின் வசதிக்காக இன்று ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 3) இரவு இந்த ரயில் இயக்கப்பட இருக்கிறது. மதுரையில் இருந்து தாம்பரம் செல்லும் முன்பதிவு இல்லாத மெமு ரயில் (06100) இன்று மதுரையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 3) இரவு 07.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 03.20 மணிக்கு தாம்பரம் சென்று சேரும்.

முன்னதாக இந்த ரயில் (06099) சென்னையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 3) காலை 10.15 மணிக்கு புறப்பட்டு மாலை 06.30 மணிக்கு மதுரை வந்து சேரும். இந்த ரயில்கள் சோழவந்தான், திண்டுக்கல், மணப்பாறை, திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களுக்கு வழக்கமான இரண்டாம் வகுப்பு முன்பதிவு இல்லாத பயண கட்டணம் வசூலிக்கப்படும். இந்த வசதியை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ரயில்வேத்துறை அறிவித்துள்ளது. 

Tags:    

Similar News