மதுரை அருகே கார் மோதிய விபத்தில் இளைஞர் பலி: டிரைவர் தப்பியோட்டம்
மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர் பலி:;
மதுரை மாவட்டம், மேலூர்- மதுரை திருச்சி சத்தியவான்குளம் நான்கு வழி டெம்பிள் சிட்டி ஹோட்டல் அருகே, விருதுநகரில் இருந்து திருச்சி நோக்கி கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது சத்தியவான்குளம் அருகே கவஞ்சான்பட்டி பகுதியை சேர்ந்த கௌதம் (23) என்ற இளைஞர், இருசக்கர வாகனத்தில் நான்கு வழிச்சாலையில் நடுவில் அமைக்கப்பட்டிருந்த தாழ்வான தடுப்புச்சுவரை மழை நீர் செல்லும் பாதையில் சாலையை கடக்க முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக கார் கௌதம் மீது மோதியது.
இதில், சம்பவ இடத்திலேயே கௌதம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த மேலூர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து தப்பியோடிய ஓட்டுனரை தேடி வருகின்றனர். இவ்விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறன்றனர். முதல்கட்ட விசாரணையில், இருசக்கர வாகன ஓட்டி தவறான பாதையில் வந்ததே விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது.