மதுரையில், உலக தற்கொலை தடுப்பு தினம், விழிப்புணர்வு முகாம்
மதுரையில் உலக தற்கொலை தடுப்பு தினத்தையொட்டி விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
மதுரை கே புதூர் இலக்குவனார் மனநல மருத்துவமனை வளாகத்தில், உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
மனநல ஆலோசகர் வினோத்குமார் வரவேற்றார். மருத்துவமனை தலைமை மருத்துவர் செல்வமணி தினகரன், தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு பற்றி எடுத்துக் கூறினார்.
மதுரை சமூக அறிவியல் கல்லூரி மாணவிகள் மாயா, கீர்த்திகா, தியாகராஜர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் தன்யாஸ்ரீ, ஹரிணி,கார்த்திகா, திருச்செல்வி, பணியாளர்கள் பேகம், தாரணி, கண்ணன்,குமாரவேல், அன்பரசி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மருத்துவமனை நிர்வாக மேலாளர் முருகு இலக்குவன் நன்றி கூறினார். முகாம் நிறைவில், தற்கொலை தடுப்பு உறுதி மொழி ஏற்கப்பட்டது.