மேலூர் அருகே தோட்டத்தில் புல் அறுக்கச் சென்ற பெண் பாம்பு தீண்டி மரணம்

பாம்பு கடித்ததில் மயக்கமடைந்த பெண்ணை அக்கம் பக்கத்தினர் மீட்டு மேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தும் பலனில்லை;

Update: 2021-09-21 17:28 GMT

பைல் படம்.

மதுரை மாவட்டம், மேலூர் அருகே தோட்டத்தில் புல் அறுக்க சென்ற பெண் பாம்பு கடித்து உயிரிழந்தார். மதுரை மாவட்டம் மேலூரை அருகே அழகிச்சிபட்டியைச் சேர்ந்த காவேரிமணியன். இவரது மனைவி பிரியா (28.) இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ள நிலையில், பிரியாவின் கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.

பிரியா வழக்கம் போல், அவரது தோட்டத்தில் மாட்டுக்கு புல் அறுத்து கொண்டிருக்கும் போது , இனம் தெரியாத பாம்பு கடித்ததில் மயக்கமடைந்ததார். இவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ,மேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை, பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே, பிரியா இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். ப்ரியாவின் இழப்பு அந்த பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கீழவளவு காவல்துறை சார்பு ஆய்வாளர் பாலமுருகன் மற்றும் மேலூர் காவல்துறை ஆய்வாளர் சார்லஸ் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறனர்.

Tags:    

Similar News