மதுரை மாவட்டம் கள்ளந்திரி ஊராட்சியில் கிராம சபை கூட்டம்
Village Meeting - மதுரை மாவட்டம் கள்ளந்திரி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.;
Village Meeting -சுதந்திர தின விழாவை முன்னிட்டு, மதுரை மாவட்டம் கள்ளந்திரி ஊராட்சியில், கிராம சபைக்கூட்டம், தலைவர் ஆசைத்தம்பி தலைமையில் நடந்தது. கிழக்கு ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சிட்டம்மாள், துணைத் தலைவர் அழகன், வருவாய்த்துறை அதிகாரிகள், வேளாண்மை துறை, சுகாதாரத்துறை அதிகாரிகள், அங்கன்வாடி பணியாளர்கள், சுய உதவி குழுவினர் உட்பட பல கலந்து கொண்டனர்.
கழிவு நீர் வாய்க்கால் வசதி, திருவிளக்கு வசதிகள் ஏற்படுத்தி தருதல், விவசாய பணிக்கு ஆட்கள் பற்றாக்குறை ஏற்படுவதால், 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை விவசாயம் உள்ளிட்ட அனைத்து பணிகளுக்கும் பயன்படுத்த அரசுக்கு கோரிக்கை எடுப்பது என்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் ஊராட்சி செயலாளர் பாண்டி நன்றி கூறினார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2