மதுரை அருகே காளிகாப்பான் கிராமத்தில் கால்நடை சிறப்பு மருத்துவ முகாம்
மதுரை அருகே காளிகாப்பான் கிராமத்தில் கால்நடை சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.;
மதுரை அருகே காளிகாப்பான் கிராமத்தில் கால்நடை மருத்துவ முகாம் நடந்தது.
மதுரை மாவட்டம், மதுரை கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட காளி காப்பான் கிராமத்தில், தமிழ்நாடு அரசு, கால்நடை பராமரிப்பு துறை மற்றும் சுகாதார விழிப்புணர்வு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
இதில், கால்நடைகளுக்கான மடிஇறங்குதல், கர்ப்பப்பை வெளியேறுதல், மற்றும் நோய் தடுப்புமருந்துகள் , பூச்சி மருந்து, கோடைக்கால நோயான வெட்கை மற்றும் அம்மை நோய்களுக்கு சிறப்பு சிகிச்சையளிக்கப்பட்டது. .
கால்நடை பராமரிப்புத்துறை மண்டல உதவி இயக்குனர் என். ஆர். சரவணன் மற்றும் கால்நடை நோய்கள் புலனாய்வு பிரிவு உதவி இயக்குனர் சரவணன் ஆகியோர் கலந்துகொண்டு கால்நடைகளுக்கான சிறப்பு முகாமில் மருந்துகள் ஆலோசனை வழங்கினர்.
மற்றும் கால்நடை உதவி மருத்துவர்கள் சத்தியபிரியா, பியுலா, கால்நடை ஆய்வாளர்கள் சோணைமுத்து, சாந்தி, கால்நடை உதவியாளர் அழகம்மா ஆகியோர் கால் நடைகளுக்கான நோய் தடுப்பு பரிசோதனைகள் செய்து மாடு, ஆடு, கோழிகள், நாய் உள்பட 879 கால்நடைகளுக்கு மருந்து வழங்கினர்..