வைகை அணையை தூர்வார வேண்டும்: பாஜக விவசாயி அணி வலியுறுத்தல்

முல்லை பெரியாறு அணை, வைகை அணையை தூர் வாரி அணையின் கொள்ளளவை அதிகரிப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

Update: 2021-10-30 05:45 GMT

மதுரையில் நடைபெற்ற பாஜக விவசாயிகள் அணி ஆலோசனைக்கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள்

வைகை அணையை தூர்வார  தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாரதிய ஜனதா கட்சி விவசாய அணி ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது

மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள தனியார் மண்டபத்தில், முல்லைப் பெரியாறு நீர்பாசன சங்கம் மற்றும் பாரதிய ஜனதா கட்சி மாநில அளவிலான விவசாய அணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

 விவசாய அணி மாநிலத் தலைவர் ஜி.கே நாகராஜன் தலைமை வகித்தார். விவசாய அணி மாநில துணைத் தலைவர் முத்துராமன், மாவட்ட தலைவர் மகா சுசிந்திரன், மாநில விவசாய அணி செயலாளர் மணி முத்தையா, மாவட்ட விவசாய அணி தலைவர் பூமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆலோசனை கூட்டத்தில், நீர்நிலைகளை மேம்படுத்துவது, முல்லை பெரியாறு அணை மற்றும் வைகை அணையை தூர் வாரி அணையின் கொள்ளளவை அதிகரிப்பது என்பன  உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  இதில், முல்லை பெரியாறு நீர்பாசன சங்கத் தலைவர் சதீஷ் பாபு மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் பாஜக விவசாய அணி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News