மதுரை அருகே துவரிமானில் மேம்பாலபணிகள்: முன்னாள் எம்.எல்.ஏ. பா.ஜ.க.வினர் ஆய்வு
நில உரிமையாளர்களுக்கு உரிய தொகை வழங்குவதற்காக நிதியமைச்சரை விரைவில் சந்தித்து கோரிக்கை மனு அளிக்கவுள்ளோம்.;
மதுரை மாவட்டம் பரவை, துவரிமான் ஊர்களுக்கு இடையே வைகை ஆற்றின் குறுக்கே இணைப்பு பாலம்
பாலத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வருவது முற்றிலும் பாஜகவின் முயற்சி என்றார் முன்னாள் எம்எல்ஏ டாக்டர்சரவணன்.
மதுரை மாவட்டம் பரவை, துவரிமான் ஊர்களுக்கு இடையே வைகை ஆற்றின் குறுக்கே இணைப்பு பாலம் கட்டி 2 வருடங்கள் ஆகிய நிலையிலும் அதற்கான சாலை வசதி அமைக்கப்படவில்லை. மேலும், அங்குள்ள நிலங்களின் உரிமையாளர்களுக்கு முறையான மதிப்பீடு தொகை வழங்குவதிலும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான இந்த பாலத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ள நிலையில், பா.ஜ.க நிர்வாகிகள் தலையிட்டு மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகளிடம் முறையிட்டு தற்போது, அதற்கான வேலைகள் நடைபெறவுள்ளது.
கம்யூனிஸ்ட் கட்சியினர் அந்த பாலத்திற்கான வேலைகளை தொடங்ககோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து, பா.ஜ.க மாவட்ட தலைவர் டாக்டர்.சரவணன், தலைமையில் பா.ஜ.க நிர்வாகிகள் பாலத்தை நேரில் சென்று பார்வையிட்டு, பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
மாவட்ட ஆட்சியர், அரசு அதிகாரிகள் மற்றும் அங்கு குடியிருக்கும் பொதுமக்களிடம் முறையாக பேச்சுவார்த்தை நடத்தி அவர்களுக்கு உரிய மதிப்பீடு தொகை வழங்குவதற்கும், 1 மாதத்திற்குள் சாலை அமைப்பதற்கான வேலைகளை தொடங்குவதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளோம். மேலும், நில உரிமையாளர்களுக்கு உரிய தொகை வழங்குவதற்கான ஆவணம் தமிழக நிதியமைச்சரின் அலுவலகத்தில் உள்ளது.அதற்காக நிதியமைச்சரை விரைவில் சந்தித்து கோரிக்கை மனு அளிக்கவுள்ளோம்.ஆனால், அதனை கம்யூனிஸ்ட் கட்சியினர் தங்களது முயற்சி போல் சித்தரித்து திசை திருப்ப முயல்கின்றனர். யாரோ பெற்ற குழந்தைக்கு யாரோ பெயர் வைப்பது போல் உள்ளது இந்த செயல் என்று டாக்டர் சரவணன் தெரிவித்தார்.
இதில், பரவை மண்டல் தலைவர் ரமேஷ், மாரிசக்கரவர்த்தி, மோகன்குமார், கோகுல், சிதம்பரம், வினோத், செல்லூர் ரமேஷ், பரவை மண்டல் நிர்வாகிகள் துரைபாஸ்கர், பாலாஜி, இளங்கோவன், பொதுமக்கள் உடனிருந்தனர்.