பீடிக்கு நெருப்பு கேட்ட ஆட்டோ ஓட்டுநர் கொலை: இருவர் கைது

நரசிங்கம் டாஸ்மாக் கடை அருகே பீடி பற்றவைக்க தீப்பெட்டி கேட்டபோது ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்தது;

Update: 2021-11-07 13:15 GMT

ஆட்டோ ஓட்டுநரை கொலை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை அருகே பீடிக்கு  தீப்பெட்டி கேட்டபோது ஏற்பட்ட தகராறில் ஆட்டோ ஓட்டுநரை கத்தியால் குத்திக் கொலை செய்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.

மதுரை அருகே உள்ள காதக்கிணறு கண்மாய்ப்பட்டியைச் சோந்தவா் ராமகிருஷ்ணன் (38). ஆட்டோ ஓட்டுநரான இவா், நரசிங்கம் டாஸ்மாக் கடை அருகே கத்திக்குத்துக் காயங்களுடன் ஆட்டோவில் கிடந்தாா். அப்போது, அவ்வழியாகச் சென்ற அவரது உறவினா் ராஜ்கண்ணன், ராமகிருஷ்ணனை மீட்டு அரசு மருத்துவமனையில் சோத்தாா்.

ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி ராமகிருஷ்ணன் உயிரிழந்தாா். சம்பவம் தொடா்பாக, ஒத்தக்கடை போலீஸாா் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரித்தனா். அதில்,  நரசிங்கம் டாஸ்மாக் கடை அருகே பீடி பற்ற வைக்க  தீப்பெட்டி கேட்டபோது ஏற்பட்ட தகராறில், ஒத்தக்கடை கல்குவாரியைச் சோந்த மருதுபாண்டி (27), ஒத்தக்கடையைச் சோந்த மாரிமுத்து(26), அஜீத் (26) ஆகிய 3 பேரும் சோந்து ராமகிருஷ்ணனை கத்தியால் குத்தியது தெரிய வந்தது. இதையடுத்து மருதுபாண்டி, மாரிமுத்து ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்து தப்பிச்சென்ற அஜீத்தை தேடி வருகின்றனா்.

Tags:    

Similar News